முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு பிரியாணி கிடையாது: பயிற்சியாளர்

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு பிரியாணி கிடையாது என புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள மிஸ்பா உல்-ஹக் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் மற்றும் தேர்வு குழு தலைவராக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல்-ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு கடும் உணவு கட்டுப்பாட்டை விதித்துள்ளார். இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்களின் உடல் தகுதி குறித்த பிரச்சினைகள் எழுந்தன. இதையடுத்து இப்போதே இருந்தே உணவு கட்டுப்பாடுகளை அவர் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்படி தற்போது உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு பிரியாணி, எண்ணெயில் பொறித்த உணவுகள் ஆகியவற்றை சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. பார்பிகியூ, பழங்கள் அதிகமாக சாப்பிட வீரர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதே நடைமுறையை தேசிய அணியும் விரைவில் கடைபிடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் கூறுகையில்,

பாகிஸ்தான் வீரர்கள் உணவு முறையை சரியாக கடைபிடிப்பதில்லை. மேலும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவு வகைகளையும், ஜங் உணவுகளையும் விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் மிஸ்பா உல்-ஹக் ஒவ்வொரு வீரர்களிடமும் உடல் தகுதிக்காக, உணவு முறையை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதோடு உணவுமுறையை ஒழுங்குப்படுத்த லாக் புக் ஒன்று பராமரிக்கப்பட இருக்கிறது என்றும், அதனை கடைப்பிடிக்காதவர்கள் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் மிஸ்பா உல்-ஹக் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து