முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகிலேயே அதிகம் புலம் பெயர்ந்தோர் 1.75 கோடி இந்தியர்கள்: ஐ.நா. அறிக்கை

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

உலகிலேயே அதிகம் புலம் பெயர்ந்தோர் இந்தியர்கள் என ஐ.நா. அறிக்கை கூறுகிறது. அந்த அறிக்கையின் படி 1.75 கோடி இந்தியர்கள் புலம் பெயர்ந்து உள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள புதிய மதிப்பீடுகளின்படி, 2019-ம் ஆண்டில் உலகளவில் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 27.2 கோடியை எட்டியுள்ளது. இதில் 1.75 கோடி புலம் பெயர்ந்தோர்கள் எண்ணிக்கையில் இந்தியா முன்னணியில் உள்ளது.

சர்வதேச புலம்பெயர்ந்தோர் 2019, ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறையின் (தேசா) மக்கள்தொகை பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், உலகின் அனைத்து நாடுகளுக்கும் பகுதிகளுக்கும் வயது, பாலினம் மற்றும் தோற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் சர்வதேச புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை வெளியிட்டு உள்ளது.  இந்த மதிப்பீடுகள் வெளிநாட்டில் பிறந்தவர்கள் அல்லது மக்கள் தொகை கணக்கெடுப்பு, மக்கள்தொகை பதிவேடு அல்லது தேசிய பிரதிநிதி கணக்கெடுப்புகளிலிருந்து பெறப்பட்ட வெளிநாட்டு மக்கள் தொகை குறித்த அதிகாரப்பூர்வ தேசிய புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டவை ஆகும்.

2010ஐ விட 2019-ல் உலகில் 5.1 கோடி புலம்பெயர்ந்தோர் 23 சதவீதம் அதிகரித்துள்ளனர். 2000-ம் ஆண்டு இது 2.8 சதவீதமாக இருந்தது. சர்வதேச புலம்பெயர்ந்தோரில் மூன்றில் ஒரு பங்கினர் முதல் 10 நாடுகளில் உள்ளனர் என்று அறிக்கை கூறியுள்ளது. 2019-ம் ஆண்டில், 1.75 கோடி இந்தியர்கள் வெளிநாட்டில் வசித்து வருவதால், சர்வதேச புலம்பெயர்ந்தோரின் பிறப்பிடமான நாடாக இந்தியா முதல் இடத்தில் உள்ளது.

மெக்சிகோவிலிருந்து குடியேறியவர்கள் இரண்டாவது பெரிய புலம்பெயர்ந்தோர் (1.18 கோடி), சீனா (1.07 கோடி), ரஷ்யா (1.05 கோடி), சிரியா (8.2 மில்லியன்), பங்களாதேஸ் (7.8 மில்லியன்), பாகிஸ்தான் (63 லட்சம்), உக்ரைன் (59 லட்சம்) , பிலிப்பைன்ஸ் (54 லட்சம் ) மற்றும் ஆப்கானிஸ்தான் (51 லட்சம்).

இந்தியா 2019-ம் ஆண்டில் 51 லட்சம் சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கு இடமளித்தது. இது 2015-ல் 52 லட்சத்திற்கு குறைவானது. இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் ஒரு பங்காக சர்வதேச புலம்பெயர்ந்தோர் 2010 முதல் 2019 வரை 0.4% ஆக நிலையானதாக இருந்தனர். நாடு 207,000 அகதிகளுக்கு இடமளித்து உள்ளது. அந்த அறிக்கையில், நாட்டில் சர்வதேச புலம்பெயர்ந்தோரின் பங்காக அகதிகள் நான்கு சதவீதமாக உள்ளனர். நாட்டில் சர்வதேச குடியேறியவர்களில், பெண் மக்கள் தொகை 48.8 சதவீதமாகவும், சர்வதேச குடியேறியவர்களின் சராசரி வயது 47.1 ஆண்டுகளாகவும் இருந்தது. இந்தியாவில், பங்களாதேஸ், பாகிஸ்தான் மற்றும் நேபாளத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலான சர்வதேச குடியேறியவர்கள் வந்துள்ளனர்.

2019-ம் ஆண்டில், பிராந்திய ரீதியாக, ஐரோப்பா அதிக எண்ணிக்கையிலான சர்வதேச புலம்பெயர்ந்தோரை (8.2 கோடி), வட அமெரிக்கா (5.9கோடி) மற்றும் வட ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியா (4.9 கோடி ) கொண்டு உள்ளன. ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் உலகின் 272 மில்லியன் புலம்பெயர்ந்தோரில் மிகப் பெரிய பங்கை உள்வாங்கிக் கொண்டுள்ளன, இது கடந்த தசாப்தத்தில் 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று ஐ.நா. அறிக்கை கூறி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து