முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் தேசிய குடியுரிமை பதிவேடு அறிமுகம் செய்யப்படும் - மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

ராஞ்சி : தேசிய குடியுரிமைப் பதிவேடு (என்.ஆர்.சி) நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் நாட்டில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள், நாட்டை விட்டு அனுப்பப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க. தேசியத் தலைவருமான அமித் ஷா தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் ஒரு நாளேடு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

மக்களவைத் தேர்தலின் போது மக்களிடம் அளித்த வாக்குறுதியில் தேசிய குடியுரிமை பதிவேடு அசாம் மாநிலத்தில் மட்டுமல்லாது, நாடு முழுவதும் கொண்டு வருவோம் என்று கூறியிருந்தோம். நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் இதில் பதிவு செய்யப்படுவார். சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள் மீது சட்டப்படி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த வாக்குறுதிக்குத்தான் மக்கள் எங்களுக்கு ஒப்புதல் வழங்கி வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். ஆதலால், அடுத்து நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டு வரப்படும். என்.ஆர்.சி. என்பது தேசிய அசாம் பதிவேடு அல்ல, தேசிய குடிமக்கள் பதிவேடு.

இதை நாடு முழுவதும் அமல்படுத்தும் போது, தேசத்தின் குடிமக்கள் குறித்த பட்டியல் கிடைக்கும் என்று நம்புகிறேன். அசாம் குடிமக்கள் பதிவேட்டில் தங்கள் பெயர்களை சேர்க்க முடியாதவர்கள் வெளிநாட்டினருக்கான தீர்ப்பாயத்தை அணுகி முறையிடலாம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அசாம் அரசு செய்துள்ளது. வழக்கிற்காக அலைய முடியாதவர்களுக்காக வழக்கறிஞர்களையும் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

எந்த நாட்டிலும் யாரும் எளிதாக சென்று தங்கி, குடியேறிவிட முடியாது என்று நம்புகிறேன். நான் கேட்கிறேன், அமெரிக்காவில் சென்று உங்களால் எளிதாகக் குடியேறிவிடமுடியுமா? இல்லை. நிச்சயமாக குடியேற முடியாது. அப்படி இருக்கும் போது வெளிநாட்டவர்கள் இந்தியாவில் மட்டும் எப்படி குடியேற முடியும். இதை எளிதாக புரிந்துகொள்ள முடியும். நீங்கள் இங்கிலாந்து, நெதர்லாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளில் உங்களால் குடியேற விரும்பினால் அந்நாட்டு அரசு அனுமதிக்குமா? பின் எப்படி இந்தியாவில் மட்டும் வெளிநாட்டவர் ஒருவர் வந்து, குடியேற அனுமதிக்க முடியும். இதுபோன்றெல்லாம் நாடுகள் செயல்பட முடியாது. இந்த நாட்டின் குடிமக்களுக்கு தேசிய பதிவேடு என்பது இந்த நேரத்தில் அவசியமான ஒன்று. இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து