முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த மாதம் 14-ந்தேதி கர்நாடக சட்டசபை கூடுகிறது

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரை பெலகாவிக்கு பதிலாக பெங்களூருவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந் தேதி தொடங்கி 26-ந்தேதி வரை நடத்துவது என மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.   

கர்நாடகத்தில் உள்ள பெலகாவி மாவட்டம் மராட்டிய மாநில எல்லையில் அமைந்துள்ளது.

இந்த மாவட்டத்தின் சில பகுதிகளை மராட்டிய மாநிலம் இன்னும் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதையடுத்து குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தபோது, கடந்த 2006-ம் ஆண்டு முதல் முறையாக பெலகாவியில் சட்டசபை கூட்டத்தொடர் நடத்தப்பட்டது. அதன் பிறகு ஆண்டுக்கு ஒரு முறை சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் அங்கு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து, இந்த ஆண்டு சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரை பெங்களூருவில் நடத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில்  நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி மாதுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் நடத்துவது வழக்கம். ஆனால் இந்த முறை அங்கு கனமழை பெய்து பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மக்கள் கஷ்டத்தில் சிக்கியுள்ளதால், பெலகாவியில் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவது கடினம் என்று அந்த மாவட்ட கலெக்டர் கூறினார். 

எடியூரப்பாவும்  பெலகாவியில் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் கஷ்டத்தில் இருப்பதால், பெலகாவியில் சட்டசபை கூட்டத்தொடர் நடத்த இயலாது என்று கூறினார். இதையடுத்து கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள் ளது.   இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து