முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஹில்ரமானி மாற்றத்திற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு: ஐகோர்ட்

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில்ரமானி மேகாலயாவுக்கு மாற்றப்பட்டதை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி மேகாலயா ஐகோர்ட்டுக்கு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிபதி தஹில் ரமானி தனது பதவியை கடந்த 6-ம் தேதி ராஜினாமா செய்தார். அதன் பின்னர் கடந்த 9-ம் தேதி முதல் அவர் ஐகோர்ட்டுக்கு வரவில்லை. அன்று அவர் விசாரிப்பதாக இருந்த வழக்குகளை ஐகோர்ட் மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி விசாரித்தார். அதன் பின்னர் கடந்த வாரம் 5 நாட்களும் அவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை.

இந்நிலையில், தஹில் ரமானியை மேகாலயாவுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க ஜனாதிபதியின் செயலருக்கு தடை விதிக்க வேண்டும் என, வழக்கறிஞர் கற்பகம் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தார். வழக்கறிஞர் கற்பகம் சார்பாக, நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷாயி அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் பிராபகர் முறையிட்டார். தஹில் ரமானியின் ராஜினாமா கடிதம் மீது ஜனாதிபதி இதுவரை முடிவெடுக்காத நிலையில், கொலீஜியம் பரிந்துரைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தஹில் ரமானியை மேகாலயாவுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க ஜனாதிபதியின் செயலருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் சார்பில் முறையிடப்பட்டது.

அப்போது, கொலீஜியத்தின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை நாடாமல் ஏன் ஐகோர்ட்டை நாடியுள்ளீர்கள் என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். மேலும், கொலீஜியத்தில் உள்ள சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பிறப்பித்தது, நிர்வாக உத்தரவு என்பதால் ஐகோர்ட் விசாரிக்கலாம் எனவும் வழக்கறிஞர் பிரபாகர் குறிப்பிட்டார். இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த மனுவானது பட்டியலிடப்பட்ட பின்னர் விசாரணைக்கு உகந்ததா என அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து ஐகோர்ட் உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து