முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதாரத்தில் துணிச்சலான முடிவெடுக்கின்றனர்: பிரதமர் மோடி, நிதியமைச்சருக்கு அமித்ஷா டுவிட்டரில் பாராட்டு

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

பொருளாதாரத்தில் துணிச்சலான முடிவுகளை எடுக்கும் பிரதமருக்கும்,  நிதி அமைச்சருக்கும் பாராட்டுகள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் இத்தகைய பொருளாதார சீர்திருத்தங்கள் வாயிலாக இந்தியாவை மிகப் பெரிய உற்பத்தி மையமாக்குவதே பிரதமர் மோடியின் இலக்கு என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
கார்ப்பரேட் வரிகளை முறைப்படுத்த வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நமது கார்ப்பரேட் நிறுவனங்கள் சர்வதேச அரங்கில் சிறந்த போட்டியாளராக நிலவ முடியும். நமது இந்திய சந்தை முதலீட்டாளர்கள் விரும்பும் தளமாகும். மோடி அரசு இந்தியாவை மிகப்பெரிய உற்பத்தி மையமாக்க வேண்டும் என்ற இலக்கில் உள்ளது. இன்றைய அறிவிப்புகளும் இதற்கு முன்னதாக அந்நிய முதலீட்டுக்கான விதிகளை தளர்த்தியமையும் இந்த கனவை மெய்ப்படச் செய்யும். துணிச்சலான பொருளாதார சீர்திருத்த முடிவுகளை எடுத்த பிரதமர் மோடிக்கும்,  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் எனது பாராட்டுகள் என்று அதில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று காலை ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்துக்கு செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்குமான வரி 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கு 25 சதவீதமாக இருந்த வரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து