முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் தொகுதியில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பயனாளிகள் 971பேருக்கு ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்:

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்-மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம்,கள்ளிக்குடி மற்றும் பேரையூர் தாலுகாக்களில் சிறப்புடன் நடைபெற்ற தமிழக முதலமைச்சரின் சிறப்புமக்கள் குறை தீர்க்கும் முகாம்களில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு அம்மா திட்டத்தின் மூலம் பயனாளிகள் 971 பேருக்கு ரூ.2 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம்,கள்ளிக்குடி மற்றும் பேரையூர் தாலுகாக்களில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் நேற்று வெகு சிறப்புடன் நடைபெற்றது.அதன்படி திருமங்கலம் தாலுகாவில் அ.கொக்குளம் கிராமம்,பேரையூர் தாலுகாவில் பேரையூர் பேரூர்,கள்ளிக்குடி தாலுகா குராயூர் கிராமம் ஆகிய இடங்களில் நடைபெற்ற தமிழக முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்களுக்கு மதுரை மாவட்ட கலெக்டர் டி.எஸ்.ராஜசேகர் தலைமை வகித்தார்.மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ்,திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருமங்கலம் வட்டாட்சியர் தனலட்சுமி,கள்ளிக்குடி  வட்டாட்சியர் மூர்த்தி,பேரையூர் வட்டாட்சியர் ஆனந்தி ஆகியோர் வரவேற்றனர்.
ஏழை,எளியோர் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்களில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு அம்மா திட்டத்தின் கீழ் திருமங்கலம்,கள்ளிக்குடி மற்றும் பேரையூர் வட்டங்களைச் சேர்ந்த பயனாளிகள் 971 பேருக்கு முதியோர் உதவித் தொகை,வீட்டுமனை பட்டா,பட்டா மாறுதல் உட்பிரிவு,ஆதரவற்ற விதவைச் சான்று,மினிகிட் துவரை,முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை உள்ளிட்ட ரூ.2கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.பின்னர் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் பெற்றுக் கொண்டு அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.முன்னதாக அ.கொக்குளம்,காரைக்கேணி, குராயூர் ஆகிய கிராமங்களுக்கு வருகை தந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பூரணகும்ப மரியாதை செய்தும்,வெற்றி குலவையுடன் ஆரத்தி எடுத்தும் அன்புடன் வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்: தமிழக முதலiமைச்சர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதிலும் மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் நடைபெற்று வருகிறது.இதற்காக தமிழகம் முழுவதிலும் அலுவலர்களை கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.இதில் 5லட்சம் பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதே போல் 5ஆண்டுகளுக்கு மேலாக  ஆட்சேபணை இல்லாத ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் இருந்தால் அவர்களுக்கு பட்டா வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.மேலும் ஆட்சேபணை உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு மாற்று இடங்கள் வழங்கிடவும்,இடம் இல்லையென்றால் தனியார் இடத்தினை கொள்முதல் செய்து அவர்களுக்கு இடம் வழங்கப்படவுள்ளது.வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம்.தென்மேற்கு பருவமழைகாலம் இன்னும் முடியவில்லை.காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் போது மழை பொழிவு அதிகமாக இருக்கும்.தற்போது பெய்கிற மழை தற்காலிகமாகத்தான் இருக்கும்.
தென்மேற்கு பருவமழை என்பது ஆந்திரா,கர்நாடகா,கேரளா ஆகிய பகுதிகளில் தொடர்கனமழையாக இருக்கும்.வடகிழக்கு பருவமழையின் போது தான் நமக்கு தாழ்வு மண்டலம் உருவாகி அது புயலாக,சூறாவளியாக உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது.ஆதலால் அக்டோபர்,நவம்பர்,டிசம்பர் மாதங்களில் ஏற்படும் மழைப்பொழிவு 48சதவீதம் நமக்கு குடிநீருக்காகவும்,விவசாயத்திற்காகவும் பயன்படுகிறது. அதற்காகத்தான் ரூ.700கோடிக்கு மேல் குடிமராமத்து திட்டத்திற்காக முதலமைச்சர் நிதி வழங்கியுள்ளார்.அதே போல் ஊராட்சி உள்ளாட்சி மற்றும் நகராட்சிளில் உள்ள கண்மாய்களை தூர்வாருவதற்கு ரூ.500கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.வெள்ளத் தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.288கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக பொதுப்பணித்துறையில் எங்கெல்லாம் பைப் கல்வெர்ட் உள்ளதோ அதை பாக்ஸ் கல்வெர்ட் ஆக மாற்றிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது.அதன பேரில் 32வருவாய் மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட இடங்களை கண்டறிந்து அவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்திட ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது.
கடலூர் மாவட்டத்தை பொறுத்த மட்டில் 121 நிவாரண பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.கடலோர மாவட்டங்கள் இல்லாத பகுதிகளிலும் பள்ளி,திருமண மண்டபம் ஆகியவை அடையாளம் காணப்பட்டு வருகிறது.மழை காலங்களில் பாதிக்கப்படுபவர்களுக்கு தேவையான தங்கும் இடம்,உணவு வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகள் செய்து தரப்படும்.தமிழகம் முழுவதும் 4199 பாதிக்கப்படும் இடங்கள் கண்டறியப்பட்டு அதை வரைமுறைப்படுத்திடும் பணிகள் நடைபெற்று வருகிறது.கடலோர மாவட்டங்களில் முதலமைச்சரின் உத்தரவைப் பெற்று நேரடி ஆய்வுகள் செய்து வருகிறோம். வருகிற வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்திடும் மழைநீரை சேமித்து வைக்கும் அளவிற்கு அனைத்து ஆயத்தப் பணிகளையும் தயார் நிலையில் வைத்துளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த முகாம்களில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன்,முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் ஜெயராமன்,வேலுச்சாமி,முன்னாள் யூனியன் சேர்மன் தமிழழகன்,நிலவள வங்கி தலைவர் கபிகாசிமாயன்,மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி,போத்திராஜா,மாவட்ட துணைச்செயலாளர் பஞ்சம்மாள்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன்,நகர அவைத் தலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் நகர் மன்ற துணைச் சேர்மன் சதீஸ்சண்முகம்,கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,முன்னாள் யூனியன் துணை சேர்மன்பாவடியான்,முன்னாள் பேரூராட்சி தலைவர் மாணிக்கம்,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணி,தர்மர்,பாஸ்கரன்,ராமகிருஷ்ணன், செல்வமணி செல்லச்சாமி,கல்யாணி,கள்ளிக்குடி ஒன்றிய கழகச் செயலாளர் மகாலிங்கம்,முன்னாள் துணை சேர்மன் கண்ணன்,அவை தலைவர் வேல்பாண்டி,அம்மா பேரவை வேல்ராமகிருஷ்ணன், சின்னஇருளப்பன்,முருகன்,அழகர்,அன்னமுத்து,வில்லூர் சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அன்னக்கொடி,சுகுமார்,சாமிநாதன்,கட்டாரி வேல்முருகன்,சிவன்காளை,காமதேவன்,சிங்கராஜபாண்டியன்,கொடிவைரன்,முத்து,கட்சி வழக்கறிஞர்கள் முத்துராஜா,வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து