முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கண்ணீர் மல்க கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் ஜிம்பாப்வே வீரர்

சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

சிட்டகாங் : ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெள்ளியன்று நடைபெற்ற டி20 போட்டியே தன் இறுதிப் போட்டி என்று ஜிம்பாப்வே வீரர் மசகாட்ஸா அறிவிக்கும் போது அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை. தன் கடைசி போட்டியில் அவர் இறங்கும் போது ஆப்கான்,  ஜிம்பாப்வே வீரர்கள் அவருக்கு மரியாதை செலுத்திய காட்சி நெகிழ்ச்சியாக அமைந்தது. மசகாட்ஸா தன் கடைசி போட்டியில் 41 பந்துகளில் 72 ரன்களை விளாசினார். இதன் மூலம் ஆப்கானை முதல் முறையாக ஜிம்பாப்வே அணி டி20 போட்டியில் வீழ்த்திய சாதனையைப் புரிந்தது.

36 வயதாகும் மசகாட்ஸா,  தனது 18 ஆண்டு கால கிரிக்கெட் ஆட்டத்தை நேற்று முன்தினம் முடிக்கும் இன்னிங்சில் 5 சிக்சர்களையும் 4 பவுண்டரிகளையும் விளாசி ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். அணியை கடைசி போட்டியில் வெற்றிக்கு இட்டுச் சென்றது சூப்பர் ஸ்பெஷல்தான் என்றார். மசகாட்ஸா. 2001-ல் சர்வதேச கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணியில் நுழைந்த மசகாட்ஸா அந்த அணியின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்த ஒரு வீரர்.

ஆட்டம் தொடங்கும் முன் அணி வீரர்களுடன் பேசும் போது உணர்ச்சிவயப்பட்டேன். கொஞ்சம் அழுதும் விட்டேன். நான் பொதுவாக உணர்வுகளை வெளிப்படுத்தாதவன் ஆனால் இந்தத் தருணம் என்னிடம் சில உணர்ச்சிகளை வெளிக்கொணர்ந்தது. என்னால் 3 வாக்கியங்களைக் கூட சரியாகப் பேச முடியாத அளவுக்கு உணர்ச்சிவயப்பட்டேன். மசகாட்ஸா தன் முதல் டெஸ்ட் சதத்தை மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக எடுத்த போது இளம் வயதில் சதம் எடுத்த உலக சாதனையை புரிந்தார். அப்போது அவருக்கு 17 வயது 254 நாட்கள் ஆகியிருந்தன. ஆனால் இவரது உலக சாதனை 3 மாதங்களே தாக்குப் பிடித்தது காரணம் வங்கதேச இளம் வீரர் முகமது அஷ்ரபுல் இவர் சாதனையை முறியடித்தார்.

ஜிம்பாப்வே அணியின் முதல் தர கிரிக்கெட்டில் சதம் எடுத்த முதல் கறுப்பின வீரர் என்ற சாதனைக்கும் மசகாட்சா சொந்தக்காரர். ஆனால் அதன் பிறகு படிப்புக்காக 3 ஆண்டு காலம் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார். மீண்டும் வந்த போது ஜிம்பாப்வே அணி வீரர்களுக்கும் வாரியத்துக்கும் பிரச்சினைகள் மூண்டிருந்தன. இது இவரது கிரிக்கெட் வாழ்க்கையை பாதித்தது. இதனால் தன் 2-வது டெஸ்ட் சதத்தை எடுக்க மசகாட்ஸா 2011 வரை காத்திருக்க நேரிட்டது. அதாவது ஜிம்பாப்வே 5 ஆண்டுகள் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்து மீண்டும் வந்த போதுதான் இவர் வங்கதேசத்துக்கு எதிராக தன் 2-வது டெஸ்ட் சதத்தை எடுக்க முடிந்தது.

மசகாட்ஸா 39 டெஸ்ட் போட்டிகள், 209 ஒருநாள் சர்வதேச போட்டிகள் 66 டி20 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார். 38 டெஸ்ட் போட்டிகளில் 2223 ரன்களை 30 ரன்கள் சராசரியுடன் 5 சதங்கள் 8 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 158. 209 ஒருநாள் போட்டிகளில் 5,658 ரன்களை 5 சதங்கள் 34 அரைசதங்களுடன் 86 சிக்சர்களுடன் எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 178 நாட் அவுட். அதே போல் 66 டி20 சர்வதேச போட்டிகளில் 1662 ரன்களை 11 அரைசதங்களுடன் அதிகபட்ச 93 ரன்களுடன் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 117.20.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து