முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்க 3 தலைமுறைகளாக உழைத்த பா.ஜ.க. - மும்பை பிரச்சாரத்தில் அமித்ஷா பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

மும்பை : காஷ்மீரின் சிறப்பு சட்டம் நீக்கத்திற்காக பா.ஜ.க.வினர் 3 தலைமுறைகளாக உழைத்துள்ளனர் என்ற அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்தார்.
மும்பையில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மேலும் கூறியதாவது,

பிரதமர் மோடியின் தைரியத்தை நான் பாராட்டுகிறேன். மத்தியில் பா.ஜ.க. இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பின்னர், காஷ்மீர் சிறப்பு சட்டத்தை நீக்குவது என்ற முடிவை அவர் தான் எடுத்தார். சிறப்பு சட்டம் 370-வது பிரிவு அரசியல் பிரச்சினை என ராகுல் சொல்கிறார். ராகுல் தற்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார். ஆனால், சிறப்பு சட்டம் நீக்கத்திற்காக பா.ஜ.க.வினர் 3 தலைமுறைகளாக உழைத்துள்ளனர். இது அரசியல் பிரச்சினை அல்ல. தேசத்தை ஒன்றாக வைப்பதற்கான எங்களது இலக்கு என்று தெரிவித்தார்.

மேலும் 1947-ல் காஷ்மீரில், பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களுக்கு எதிராக, இந்திய ராணுவம் வலிமையுடன் போரிட்டு கொண்டிருந்த போது, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தன்னிச்சையாக போர் நிறுத்தத்தை அறிவிக்காமல் இருந்திருந்தால், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரச்னை வந்திருக்காது. சிறப்பு சட்டம் ரத்துக்கு பிறகு, காஷ்மீரில் அமைதி நிலவுகிறது. மோடி, பதவி ஏற்ற பிறகு, சாத்தியம் இல்லாததை சாத்தியம் ஆக்கியுள்ளோம் என்று  அமித்ஷா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து