முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாங்குநேரி - விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் குவிந்தன - ஓ.பி.எஸ் -இ.பி.எஸ். இன்று நேர்காணல்

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் குவிந்தன. இவ்வாறு விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று நேர்காணல் நடத்துகின்றனர். இதைத் தொடர்ந்து இன்றே வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது, ,

2 தொகுதி இடைத்தேர்தல்

நாங்குநேரி தொகுதி - விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 21 ம்தேதி நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது, , இதற்கான அறிவிக்கை இன்று வெளியிடப்படுகிறது. இதைத்தொடர்ந்து இன்று முதல் வேட்புமனுத்தாக்கல் செய்யும் பணி தொடங்குகிறது. வரும் 30-ம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் பரிசீலனை அக்டோபர் 1-ம் தேதி நடைபெறுகிறது,. வேட்பு மனுக்களை வரும் அக்டோபர் 3- ம் தேதி திரும்ப பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 24- ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த நிலையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், அ.தி.மு..க இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பின்படி, விக்கிரவாண்டி நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோரின் விருப்பமனு தாக்கல் செய்யும் பணி நேற்று தொடங்கியது. விருப்ப மனு கொடுத்தவர்கள்

நாங்குநேரி தொகுதிக்கு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் ராஜதுரை, திரைப்பட இயக்குனர் நாஞ்சில் அன்பழகன் ஆகியோர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் ரூ. 25 ஆயிரம் செலுத்தி விருப்ப மனுக்களை வழங்கினர். விக்கிரவாண்டி தொகுதிக்கு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.பி. லட்சுமணன் உள்ளிட்டவர்கள் தங்களது விருப்பமனுக்களை வழங்கினர். இந்த மனுக்களை அ.தி.மு.க. ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் தமிழ்மகன் உசேன், அ.தி.மு.க. மேலாளர் மகாலிங்கம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இன்று நேர்காணல்

இன்று இரண்டாவது நாளாக மனுக்கள் பெறப்படுகின்றன. இதைத்தொடர்ந்து இன்று மாலை 3-30 மணிக்கு விருப்பமனுத்தாக்கல் செய்தவர்களுடன் நேர்காணல் நடைபெறுகிறது. அதன் பின்னர் அ.தி.மு.க. ஆட்சிமன்றக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைமைக்கழக அலுவலகத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கின்றனர்.

பட்டியல் இன்று வரலாம்

இந்த கூட்டத்தின் முடிவில் விக்கிரவாண்டி - நாங்குநேரி தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. போட்டியிடும் என்றும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமலஹாசன் அறிவித்துள்ளார். மற்ற கட்சிகளின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து