முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் காஷ்மீர் பண்டிட்டுகள் உற்சாக வரவேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

ஹூஸ்டன் : பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் உள்ள சீக்கிய, போரா, காஷ்மீரி பண்டிட் சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் ஹவுடி - மோடி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அமெரிக்க அதிபர் டிரம்பும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்நிகழ்ச்சியில் அவர்கள் முன் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதனிடையே, அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரை சென்றடைந்த பிரதமர் மோடியை இந்திய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

இதன்பின்பு அவரை ஹூஸ்டன் நகரில் உள்ள ஆற்றல் துறை தலைமை செயல் அதிகாரிகள் கொண்ட குழுவினர் வரவேற்றனர். அவர்களுடன் பிரதமர் மோடி வட்ட மேஜை கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டார். பின்பு அவர்களுடன் சேர்ந்து குழு புகைப்படமும் எடுத்து கொண்டார். இதன்பின் ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடியை சீக்கிய சமூகத்தினர் வரவேற்றனர். கர்த்தார்பூர் வழித்தடம் திறப்பதற்கு மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் உள்ளிட்ட சீக்கிய சமூகத்தினருக்கான பணிகளுக்காக பிரதமர் மோடிக்கு அவர்கள் நினைவு பரிசு வழங்கி தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இதே போன்று, போரா சமூக உறுப்பினர்கள் பிரதமர் மோடியை ஹூஸ்டன் நகரில் வரவேற்று சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவருடன் புகைப்படமும் எடுத்து கொண்டனர். தொடர்ந்து காஷ்மீரி பண்டிட் சமூகத்தினர் அடங்கிய குழுவினரும் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். அவர்களில் ஒருவர் பிரதமர் மோடியின் கைகளுக்கு முத்தமிட்டபடி, 7 லட்ச காஷ்மீரி பண்டிட்டுகளின் சார்பில் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து