முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனக் கொடியை மிதித்த போராட்டக்காரர்கள் ஹாங்காங்கில் தொடரும் பயங்கர வன்முறை

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்  : ஹாங்காங்கில்16-வது வாரமாகத் தொடரும் போராட்டத்தில் போராட்டக்காரர்கள் சீனக் கொடியை காலால் மிதித்ததைத் தொடர்ந்து பயங்கர வன்முறை வெடித்துள்ளது.

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து ஹாங்காங் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது ஹாங்காங். சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹாங்காங் நாட்டுக்கென தனி கரன்சி, சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.

இந்நிலையில், ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் சட்டத் திருத்த மசோதாவை கடந்த ஜூன் மாதம் ஹாங்காங் கொண்டு வந்தது. இந்த மசோதாவுக்கு எதிராக ஹாங்காங்கில் தீவிரப் போராட்டங்கள் நடந்தன. லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு புதிய சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். கைதும் செய்யப்பட்டனர்.

இதன் காரணமாக போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த மசோதாவைத் திரும்பப் பெறுவதாக ஹாங்காங் அரசு அறிவித்தது.

எனினும் கடந்த 4 மாதங்களாக போராட்டக்காரர்களின் பிற தேவைகளையும் நிறைவேற்றக் கூறி போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர் .

இதுகுறித்து ஹாக்காங் ஊடகங்கள், கூறுகையில் போராட்டக்காரர்கள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுமாறு நடத்திய போராட்டம் தீ எரிப்பு, சீனக் கொடிகளை மிதித்ததைத் தொடர்ந்து வன்முறையாக மாறியது. இதன் காரணமாக போலீஸார் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதன்காரணமாக ஹாங்காங்கின் வடக்குப் பகுதியில் உள்ள ஷாதின் நகரில் வன்முறை வெடித்தது. மேலும் போராட்டக்காரர்களை நோக்கி ரப்பர் குண்டுகளால் சுட்டனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் ஒருவர் கூறும்போது, “ நாங்கள் ஒருவேளை சோர்வடைந்தாலும் எங்கள் உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்” என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து