முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பங்களாதேஷ்: டெங்கு காய்ச்சலுக்கு 75 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

டாக்கா : பங்களாதேசில் டெங்கு காய்ச்சளுக்கு பலியானோரின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.

பங்களாதேசில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் கடந்த 23-ம் தேதி வரை டெங்கு காய்ச்சலுக்கு 75 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மொத்தம் 162 பேர் பலியாகியிருப்பதாக உள்ளூர் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து சுகாதார சேவைகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பங்களாதேஷ் முழுவதும் தற்போது 2018 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டாக்காவில் உள்ள 41 மருத்துவமனைகளில் 861 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் மொத்தம் 1157 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து