முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த ராணுவ தளபதி யார்?: நியமிக்கும் பணியை தொடங்கியது மத்திய அரசு

வியாழக்கிழமை, 26 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ஜெனரல் பிபின் ராவத்துக்குப் பின் அடுத்த ராணுவ தளபதியை நியமிக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

தற்போதைய ஜெனரல் பிபின் ராவத்துக்குப் பின் அடுத்த ராணுவத் தளபதியை நியமிக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. ஜெனரல் ராவத்தின் மூன்று ஆண்டு பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31 அன்று முடிவடைகிறது. ராணுவப் படைத் துணைத் தலைவர், லெப்டினென்ட் ஜெனரல் எம்.எம். நர்வானே, வடக்கு ராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ரன்பீர் சிங் மற்றும் தெற்கு ராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் சதீந்தர் குமார் சைனி ஆகியோர் இந்த பதவிக்கு போட்டியிட வாய்ப்புள்ளது. அடுத்த தலைவரை நியமிப்பதற்கான செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது மற்றும் மூத்த லெப்டினன்ட் ஜெனரல்களின் பெயர்கள் இந்த பதவிக்கு பரிசீலிக்கப்படும் என மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் உயர் பதவிகளில் நியமனம் செய்வதற்கான கோப்பு சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் இணை செயலாளரால் தயாரிக்கப்பட்டாலும் இறுதி முடிவு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழுவால் எடுக்கப்படுகிறது. இந்த குழுவில் உள்ள ஒரே அமைச்சர் அமித்ஷா மட்டுமே. நாட்டின் பாதுகாப்பு கொள்கையை அமல்படுத்துவதில் ஒன்றிணைந்து செயல்படுவதால், தனது பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்களை நியமிப்பதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் முக்கிய பங்கு வகிக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து