முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதி அரேபியாவிற்கு ராணுவ வீரர்களை அனுப்பும் அமெரிக்கா

வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

சவுதி அரேபிய நாட்டின் பாதுகாப்பிற்கு உதவ 200 ராணுவ வீரர்களையும் சில பேட்ரியாட் ஏவுகணைகளையும் அந்நாட்டிற்கு தர உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள இரு முக்கிய எண்ணெய் உற்பத்தி நிலையங்கள், ஆளில்லா விமானங்கள் மூலம் சமீபத்தில் தாக்கப்பட்டன. இந்த தாக்குதலுக்கு ஈரான் நாடுதான் காரணம் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் இந்த குற்றச்சாட்டை ஈரான் மறுத்தது. இந்த நிலையில், சவுதி அரேபிய நாட்டின் பாதுகாப்பிற்கு உதவும் வகையில் 200 ராணுவ வீரர்களையும், பேட்ரியாட் ஏவுகணைகளையும் அந்நாட்டிற்கு அமெரிக்கா அனுப்ப உள்ளது என அமெரிக்க ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், இந்த ராணுவப்படைகள் சவுதி அரேபிய அரசின் வான்வழி மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளுக்கு கூடுதல் பலம் தரும். அரசின் முடிவை பொருத்து தாட் எனப்படும் ஏவுகணை இடைமறிப்பு அமைப்பு கருவிகளும் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தனர். எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என கூறுவதற்கு ஆதாரங்கள் உள்ளனவா ? நிரூபிக்க இயலுமா? என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி அமெரிக்காவிற்கு நேற்று சவால் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து