முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனது 21-வது பிறந்த நாளை கொண்டாடிய கூகுள் நிறுவனம்

வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

உலகின் முதன்மையான தேடுதளமாக செயல்படுகின்ற கூகுள் நிறுவனத்தின் 21வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக் கழக மாணவர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இருவரின் கூட்டணி தேடுபொறியை உருவாக்கியது. அதற்கு கூகுள் என்று பெயரிட்டனர். இதற்கு கணிதத்தில் 10-ன் அடுக்கு 100 என்று அர்த்தம். இதுவே பின்னர் கூகுள் என்று ஆனது. 1997-ம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று கூகுள். காம் என்கிற டொமைன் பதிவு செய்யப்பட்டது. 1998-ம் ஆண்டு செப்டம்பர்  4-ம் தேதி கூகுள் ஒரு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. இதில் எதை பிறந்த நாளாக கொண்டாடுவது? என்ற குழப்பத்தின் காரணமாகவே 2005-ம் ஆண்டு வரை செப்டம்பர் 7-ம் தேதி பிறந்தநாளை கொண்டாடியது.

2005-க்கு பிறகு செப்டம்பர் 8, செப்டம்பர் 26 என கொண்டாடப்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் 27-ம் தேதி என முடிவு செய்யப்பட்டு, பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. கூகுள் இணையதள தேடுதலின் ஜாம்பவான் என்றால் மிகையல்ல. சர்வதேச அளவில் 123 மொழிகளில் 160-க்கும் மேற்பட்ட நாடுகளில் 4.5 பில்லியன் பயனர்களை பெற்றுள்ளது. இந்நிலையில் கூகுளின் 21-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சிறப்பு டூடுல் ஒன்றை கொண்டு கூகுள் நிறுவனம் தனது முகப்பை அலங்கரித்துள்ளது. 21 ஆண்டுகளுக்கு முன்பாக கூகுளின் முகப்பு பக்கம் இருந்ததை நினைவுப்படுத்தும் வகையில் பழைய கணினியில் தேடுபொறி காட்சியளிப்பதனை போன்ற டூடுலை வெளியிட்டுள்ளது. பழைய கணிப்பொறியில் கூகுள் பக்கம் திறக்கப்பட்டு, கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்ட தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து