முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் முறையாக சுற்றுலா விசாக்களை வழங்கும் சவுதி

வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

எண்ணெய் பொருளாதாரத்தை மட்டும் நம்பி இல்லாமல் சவுதி அரேபியா முதல் முறையாக சுற்றுலா விசாக்களை வழங்க உள்ளது.

சவுதி அரேபியா  முதல் முறையாக சுற்றுலா விசாக்களை வழங்கப் போவதாக கூறி உள்ளது. தனது பொருளாதாரத்தை எண்ணெயை மட்டும் நம்பி இருப்பதில் இருந்து விலக்கி வைப்பதற்கான உந்துதலின் ஒரு பகுதியாக சுற்றுலா விசாக்கள் வழங்க உள்ளது. இந்த சுற்றுலா திட்டம் என்பது சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் விஷன் 2030 சீர்திருத்த திட்டத்தின் மையப்பகுதிகளில் ஒன்றாகும்.

சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீது ஆளில்லா விமான தாக்குதல் நடைபெற்றது. உலகளாவிய எரிசக்தி சந்தைகளை உலுக்கிய இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, ஈரானை குற்றம்சாட்டியது. பேரழிவுகரமான இந்த தாக்குதலுக்கு இரண்டு வாரங்களுக்கு பிறகு தற்போது இந்த சுற்றுலா விசா அறிவிப்பு வந்துள்ளது. சுற்றுலாவை உக்குவிக்கும் முயற்சியில் விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் கலந்து கொள்ள பார்வையாளர்களுக்கு கடந்த ஆண்டு சவுதி அரேபியா விசா வழங்கத் தொடங்கியது.

இது குறித்து சுற்றுலாத் தலைவர் அகமது அல் கத்தீப் கூறும் போது,

சவுதி அரேபியாவை சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்குத் திறப்பது நம் நாட்டுக்கு ஒரு வரலாற்று தருணம் ஆகும். இங்கு வந்தால் பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள். நாம் பகிர்ந்து கொள்ள வேண்டிய பொக்கிஷங்களால் - ஐந்து யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் உள்ளன. ஒரு துடிப்பான உள்ளூர் கலாச்சாரம் மற்றும் ஆச்சரியப்படக்கூடிய இயற்கை அழகு உள்ளன. சவுதி அரேபியா வெளிநாட்டு பெண்களுக்கான அதன் கடுமையான ஆடை கட்டுப்பாட்டை எளிதாக்கும். சவுதி பெண்களுக்கு பொது உடைகள் கட்டாயமாக இருக்கும் உடல் மூடிய அபயா அங்கி இல்லாமல் அவர்களை செல்ல அனுமதிக்கிறது. எவ்வாறாயினும், வெளிநாட்டு பெண்கள் அடக்கமான ஆடைகளை அணிய வேண்டும் என கூறினார்.

49 நாடுகளின் குடிமக்களுக்கு சவுதி அரேபியா ஆன்லைன் சுற்றுலா விசாக்களுக்கான விண்ணப்பங்களை இன்று முதல் வினியோகிக்கும் என்று ப்ளூம்பெர்க் நியூஸ் தெரிவித்து உள்ளது. மது தடைசெய்யும் மற்றும் கடுமையான சமூக நெறிமுறைகளைக் கொண்ட கடுமையான சவுதி அரேபியா சுற்றுலாப் பயணிகளுக்கு கடினமானவையாக பலரால் பார்க்கப்படுகிறது. இந்த சுற்றுலா விசா தற்போது வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்கள், அவர்கள் சார்ந்தவர்கள் மற்றும் முஸ்லீம் யாத்ரீகர்கள் மெக்கா மற்றும் மதீனாவில் உள்ள புனித இடங்களுக்கு பயணிக்க தடை விதிக்கிறது. புதிதாக ஒரு சுற்றுலாத் துறையை கட்டமைக்கும் முயற்சியில் சவுதி அரேபியா கோடிகளை குவித்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து