முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானத்தில் கோளாறு: மீண்டும் நியூயார்க் திரும்பினார் இம்ரான்கான்

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

நியூயார்க் : இம்ரான்கான் சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் நியூயார்க் நகரத்திற்கே அவர் திரும்பினார்.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு வந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ஐ.நா. கூட்டத்துக்கு பிறகு தனது நாட்டிற்கு திரும்பினார். ஆனால் அவரது பயணம் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சவுதி அரேபிய இளவரசரின் சொந்த விமானத்தில், இம்ரான்கான் அமெரிக்கா வருகை தந்திருந்தார்.

அதே விமானத்தில் இம்ரான்கான் மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பினார். ஆனால், சில மணி நேரங்களிலேயே இம்ரான்கான் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் நியூயார்க் கென்னடி விமான நிலையத்திற்கே திரும்பியது. தொழில்நுட்ப வல்லுநர்கள் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலை சரி செய்ய முயன்றனர். ஆனால், அதை சீர் செய்ய கூடுதல் நேரம் தேவைப்பட்டது. இதையடுத்து தங்கியிருந்த ஓட்டலுக்கே இம்ரான்கான் திரும்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து