முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை விஜயசாந்தியை பா.ஜ.க.வில் இணைக்க திட்டம்

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் : பிரபல நடிகை விஜயசாந்தி பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

தெலுங்கானா காங்கிரசில் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய பிரபல நடிகை விஜயசாந்தி மீண்டும் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தசரா பண்டிகைக்கு முன்பாக விஜயசாந்தி பா.ஜ.க.வில் இணைவார் என்றும் மராட்டிய சட்டமன்ற தேர்தலில் நட்சத்திர பிரமுகராக பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றும் பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜயசாந்தி தென் மாநிலங்களில் மிகவும் பிரபலமானவர் என்பதால், பா.ஜ.க.வில் அவர் இணைவது அக்கட்சிக்கு வலுசேர்க்கும் என்று பாஜக தலைவர்கள் நம்புகின்றனர். மராட்டிய மாநிலத்தில் 15 முதல் 20 தொகுதிகளில் விஜயசாந்தியை பிரசாரத்தில் ஈடுபடுத்த பா.ஜ.க. டெல்லி தலைமை திட்டமிட்டுள்ளது. ஏனெனில், தெலுங்கானா மாநில எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் விஜயசாந்திக்கு என தனி செல்வாக்கு உள்ளதாக கூறப்படுகிறது.

விஜயசாந்தியை பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தி கட்சியில் இணைக்க தெலுங்கானா மாநில பா.ஜ.க. தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால், டெல்லியில் பாஜக தலைமையை சந்தித்து விஜயசாந்தி கட்சியில் இணைவாரா? அல்லது தெலுங்கானாவில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தி கட்சியில் இணைவாரா? என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் விஜயசாந்தியுடன் கடந்த 15 நாட்களாக கட்சியில் இணைவது பற்றி ஆலோசித்து முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து