முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒவ்வொரு நாடாக சென்று கதவைத் தட்டும் இம்ரான்கான்- ராஜ்நாத்சிங்

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

மும்பை : பாகிஸ்தான் பிரதமர் நாடு நாடாக சென்று ஆதரவு கேட்பதாகவும், இது மீம் கிரியேட்டர்களுக்கு வாய்ப்பாக உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.  

மும்பையில் உள்ள மஸ்கான் கப்பல் கட்டும் தளத்தில், கல்வாரி ரக நீர்மூழ்கி கப்பல்கள் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த கல்வாரி ரகத்தைச் சேர்ந்த ஐஎன்எஸ் கந்தேரி நீர்மூழ்கிக் கப்பல், நேற்று இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கந்தேரி நீர்மூழ்கிக் கப்பலை கடற்படையுடன் இணைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத்சிங் கலந்துகொண்டு, ஐ.என்.எஸ் கந்தேரி நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், "இந்திய கடலோரப் பகுதிகள் மீது மும்பை தாக்குதல் போன்ற சம்பவங்களை நிகழ்த்த சில பயங்கரவாத சக்திகள் உள்ளன. ஆனால் அவர்களின் ஆசைகள் நிறைவேற அனுமதிக்க மாட்டோம். கந்தேரி கப்பலை இணைத்துள்ளதன் மூலம் இந்திய கடற்படை மிகவும் வலுவாகிவிட்டது என்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஆயுதப்படைகளை வலுப்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது. தேசத்தில் சமாதானத்தை சீர்குலைப்பவர்கள் மீது கடற்படை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

பின்பு, ஐ.நா பொது சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியதை குறித்து பேசிய ராஜ்நாத் சிங், இம்ரான் கான் நாடு நாடாக சென்று கதவைத் தட்டி காஷ்மீர் விவகாரத்தில் ஆதரவு கேட்பதாகவும், இதன்மூலம் மீம் கிரியேட்டர்களுக்கு வாய்ப்பை வழங்கி உள்ளதாகவும் கிண்டலாக கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து