முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதிகளின் ஆசை நிறைவேற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் - நீர்மூழ்கி கப்பல் அர்ப்பணிப்பு விழாவில் ராஜ்நாத்சிங் சூளூரை

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

மும்பை : மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நீர்மூழ்கி மற்றும் போர்க்கப்பலை மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.  

இந்திய கடற்படைக்கு உள்நாட்டிலேயே போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், ரோந்து கப்பல்கள், தயாரிக்கப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் சென்னை வந்த மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் இந்திய கடற்படைக்கு ‘வராஹா’ ரோந்து கப்பலை தொடங்கி வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த நிலையில் இந்திய கடற்படைக்கு ஐ.என்.எஸ். கந்தேரி என்ற நீர்மூழ்கி கப்பலை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று மும்பையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் , கந்தேரி நீர்மூழ்கி கப்பலை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

பிரான்சில் வடிவமைக்கப்பட்டு மும்பையில் கட்டப்பட்ட இந்த நீர்மூழ்கி கப்பல் இந்திய கடலில் பயங்கரவாத தடுப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபடும். இது இந்தியாவின் 2-வது நீர்மூழ்கி கப்பலாகும். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:- 

சில சக்திகள் மும்பை தாக்குதலைப் போன்று இந்திய கடலோர பகுதிகளில் தாக்குதல் நடத்த விரும்புகின்றன. ஆனால், அவர்களது ஆசைகள் நிறைவேற அனுமதிக்க மாட்டோம். காந்தேரி நீர் மூழ்கி கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டு கூடுதல் பலம் பொருந்தியதாக மாறி இருப்பதை பாகிஸ்தான் உணர்ந்துகொள்ள வேண்டும். இந்திய பாதுகாப்பு படைகளை பலம் மிக்கதாகவும், புதுமைபடுத்துவதிலும் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஐ.நா.சபையில் பேசும்போது, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மீது குற்றம் சாட்டி உள்ளார். ஜம்முகாஷ்மீர் பிரச்சனையில் எங்களுக்கு உலகம் முழுவதும் ஆதரவு இருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் பிரதமர் ஒவ்வொரு நாடாக ஓடிச்சென்று கதவை தட்டிக்கொண்டிருக்கிறார். இது அவரை ஒரு கார்ட்டூன் பொம்மைப்போல சித்தரிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.இதேபோல் நீல்கிரி போர்க்கப்பலையும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நாட்டிற்கு அர்ப்பணித்து இந்திய கடற்படையில் ஒப்படைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து