முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே. வங்கத்தில் ரயிலில் அடிபட்டு பெண் யானை உயிரிழப்பு - வைரலாகும் வீடியோவால் பொதுமக்கள் கவலை

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலத்தில் ரயிலில் அடிபட்டு காயமடைந்த பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

மேற்கு வங்க மாநிலத்தின் ஜல்பய்குரியில் உள்ள பனார்ஹட் - நக்ராகடா ரயில் வழித்தடம் யானைகள் அதிகம் நடமாடும் பகுதியாகும். இதனால் 2015- 2016 ஆம் ஆண்டில் அந்த வழியே செல்லும் ரயில்கள் 25 கி.மீ வேகத்தில் இயங்க வேண்டும் என ரயில்வேத்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. விபத்துகள் குறைந்ததால் ரயில் இயக்கப்படும் வேகம் மணிக்கு 50 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 7.45 மணியளவில் பனார்ஹட் - நக்ராகடா வழித்தடத்தில் சிலிகுரியில் இருந்து துப்ரி வரை செல்லும் இன்டர்சிட்டி ரயில் வழக்கம் போல் 50 கி.மீ வேகத்தில் சென்றுள்ளது. அப்போது ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் யானை ஒன்று, ரயிலில் சிக்கி விபத்துக்குள்ளானது. 30 மீட்டர் தூரத்துக்கு யானை ரயிலில் இழுத்துச் செல்லப்பட்டது. யானை மீது மோதியதில் ரயிலின் முன் பகுதியும் பலத்த சேதமாகியது. தண்டவாளத்திலிருந்து மீள நினைத்த யானை மெல்ல எழுந்து ரத்தம் வழிய ஒரு மரத்தின் அருகே எழுந்து கொள்ள முடியாமல் தவித்துக் கிடந்துள்ளது. ரயிலில் வந்த பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அடிப்பட்ட யானைக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் உள் காயம் அதிகம் ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது. ரயிலில் அடிபட்டு பெண் யானை உயிரிழந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து