முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களுக்கு சக்தி அளிக்கும் பண்டிகை - சோனியா காந்தி நவராத்திரி வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : நவராத்திரி விழா தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மக்களுக்கு நவராத்திரி மற்றும் துர்கா பூஜை தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை நேற்று தொடங்கியது. இந்த பண்டிகை வரும் அக்டோபர் 7 அன்று நிறைவடையும். அடுத்து வரும் ஒன்பது நாட்களுக்கு இப்பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படும். அக்டோபர் 8 அன்று தசரா கொண்டாடப்படும். இது குறித்து காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மக்களுக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

நவராத்திரி விழாவில் ஒன்பது தினங்களுக்கும் ஒன்பதுவிதமான தோற்றங்களில் தோன்றும் அம்மன் தெய்வங்களை மக்கள் வணங்கி மகிழ்வர். இந்திய சமுதாயத்தில் இந்த வழிபாடு பெண்களுடன் தொடர்புடையது. தற்போதைய சூழ்நிலைகளில் பெண்களின் மரியாதை மற்றும் உரிமைகளை பாதுகாக்க நாம் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கிறது. பெண்கள் இந்த ஒன்பது நாட்களுக்கும் விரதமிருந்து வழிபடுவதன்மூலம் எதிர்மறை சக்திகளைக் கட்டுப்படுத்துகின்றனர். தைரியம், வீரம்,  செழிப்பு, செழுமை மற்றும் வலிமை ஆகியவற்றை வெளிப்படுத்தும் தேவியின் ஒன்பது வடிவங்களையும் வழிபடுவதன்மூலம் பெண்கள் விரும்பும் சக்தியை பெறுவர். அனைவருக்கும் எனது நவராத்திரி மற்றும் துர்கா பூஜை வாழ்த்துக்கள். இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து