முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஐ.ஐ.டி.-ன் பட்டமளிப்பு விழா - பிரதமர் மோடி இன்று சென்னை வருகை

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

சென்னை : சென்னை கிண்டி ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார்.

சென்னை ஐ.ஐ.டி.யின் 56-வது பட்டமளிப்பு விழா இன்று 30-ம் தேதி நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் பிரதமர், பின்னர் ஹெலிகாப்டரில் சென்னை ஐ.ஐ.டி.க்கு செல்கிறார். இதற்காக சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள ஹெலிபேட் சரி செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் டெல்லியில் இருந்து பிரதமரின் தனிப் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று முன்தினம் சென்னை வந்து ஆய்வு மேற்கொண்டனர்.விழா நடைபெறும் ஐ.ஐ.டி வளாகம், அரங்கம், பிரதமர் தங்க வைக்கப்படும் அறை உள்ளிட்டவற்றை அவர்கள் ஆய்வு செய்தனர். காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து பிரதமர் உட்பட சில முக்கிய நபர்களுக்கு தீவிரவாதிகள் குறி வைத்திருப்பதாக மத்திய உளவுத் துறை கடந்த 3 நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

நரேந்திர மோடி 2–வது முறை பிரதமராக பதவியேற்றபின் முதல் முறையாக தமிழகம் வருகிறார். இதனால் வரவேற்பு நிகழ்ச்சிகளை பிரமாண்டமாக நடத்த தமிழக பாரதீய ஜனதா கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக அவற்றுக்கு தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பட்டமளிப்பு விழாவில் சிறப்புரையாற்றும் பிரதமர் மோடி, விழா முடிந்ததும் மீண்டும் ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் சென்று தனி விமானத்தில் டெல்லி செல்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து