முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களுடன் நிர்மலா சீதாராமன் முக்கிய ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

நமது நாட்டில் பொருளாதார வளர்ச்சியானது மந்த நிலையில் உள்ளது. முக்கிய தொழில் துறைகள் முடங்கி உள்ளன. பொருளாதார வளர்ச்சி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது.

இந்தநிலையை மாற்றி அமைப்பதற்கும், பொருளாதார வளர்ச்சி வேகம் எடுப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
இந்தநிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பொதுத்துறை நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களின் கூட்டத்தை டெல்லியில் நேற்று கூட்டி, முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், மத்திய அரசுக்கு சொந்தமான (பொதுத்துறை) நிறுவனங்களான பி.எச்.இ.எல்., இந்திய எரிவாயு நிறுவனம், இந்திய நிலக்கரி நிறுவனம், இந்திய எண்ணெய் கழகம், தேசிய அனல் மின் நிறுவனம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம், இந்திய உருக்கு நிறுவனம், பாரத் பெட்ரோலிய நிறுவனம் ஆகிய 8 மகாரத்தின நிறுவனங்கள் மற்றும், பாரத மின்னணு நிறுவனம், என்ஜினீயர்ஸ் இந்தியா, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், இந்துஸ்தான் பெட்ரோலிய கழகம் உள்ளிட்ட 16 நவரத்தின நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில், அடுத்த இரு காலாண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் நல்லதொரு வளர்ச்சி விகிதத்தை அடைவதற்கு மகாரத்தின, நவரத்தின நிறுவனங்கள் மூலதன செலவுகள் பெருகி தீவிர உந்துதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் மூலதன செலவின திட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும், அத்துடன் அடிமட்ட அளவில் செயல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசும்போது, இந்த நிறுவனங்களின் மூலதன செலவுகளை நிதி அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும் என்றும் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து