முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறையை புரியாமல் விமர்சிக்க கூடாது - அமைச்சர் ஜெயகுமார் அட்வைஸ்

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறை புரிந்து கொள்ளாமல் விமர்சிக்க கூடாது என்று எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் ஜெயகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் முன்னாள் மேயர் சிவராஜின் 128-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயகுமார், பெஞ்சமின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

அரசுப் பணியில் ஆங்கிலம் படித்தவர்கள் தான் 60 சதவீதம் பேர் தேர்வாகி வருகின்றனர். எனவே தமிழ் வழியில் படித்தவர்களும் வர வேண்டும் என்று தான் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ் படித்தால் மட்டும்தான் தமிழிலிருந்து ஆங்கிலம் மொழி பெயர்ப்பு செய்ய முடியும். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழி பெயர்ப்பு செய்ய முடியும். தமிழில் ஆழ்ந்த அறிவு இல்லை என்றால் தேர்வில் வெற்றி பெற முடியாது. தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்குத்தான் வேலைவாய்ப்பு என்ற அடிப்படையில் முழுமையாக நடவடிக்கை எடுத்துள்ளது. இதனைப் புரிந்து கொண்டு பேச வேண்டும். புரிந்து கொள்ளாமல் விமர்சிக்கக் கூடாது. மக்கள் செல்வாக்கு இருக்கும் காரணத்தினால் தான் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறோம். இது தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.அதர்மம் அவர்கள் பக்கம் இருக்கும் காரணத்தினால்தான், எவ்வளவு முயற்சி செய்தாலும் வர முடியாத நிலை உள்ளது. இது நிதர்சன உண்மை. தர்மம் என்ற நிலைப்படி பார்த்தால் பாண்டவர்கள் நிலையில் அரசாட்சி செய்கிறது. கௌவுரவர்கள் என்ற முறையில் அவர்களுக்கு என்றைக்கும் தோல்விதான்.கௌரவர்கள் பாண்டவர்களை வென்றதாக சரித்திரம் இல்லை. தர்மம் நிலைக்கும்.தர்மம் வெற்றி பெறும் தர்மத்தின் அடிப்படையில்,தமிழகத்தில் இரண்டு தொகுதிகள் மற்றும் புதுவையில் கழகத்தின் ஆதரவு பெற்ற என்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். 2021-ல் மீண்டும் ஆட்சி அமைப்போம்.என்றார். தொடர்ந்து

செய்தியாளர்கள் உதயநிதி ஸ்டாலின் விரைவில் நாற்காலியை பிடிப்போம் என்று தெரிவித்த கருத்து குறித்து கேட்டனர். இதற்கு அமைச்சர் மீயூசிகல் சேர் குறித்து அவர் தெரிவித்திருப்பாரா என்று தெரியவில்லை. அவர்களுக்குள் இருக்கும் குடும்ப போட்டியில், அந்த மீயூசிகல் சேர் குறித்து பேசியுள்ளார்.ஆட்சி என்ற நாற்காலி குறித்து அவர் நிச்சயம் பேசியிருக்க மாட்டார். இனிமேல் தி.மு.க. அரியணை ஏறுவது என்பது ஒரு கிழக்கே உதிக்கின்ற சூரியன் மேற்கே உதிக்காது என்பதுபோலதான். இது எந்த காலத்திலும் நடக்காத ஒன்று. எந்த நிலையிலும் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து