முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் மக்களுக்குத் துணை நிற்போம்: இம்ரான்கான்

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : காஷ்மீர் மக்களுக்குத் துணை நிற்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று நாடு திரும்பிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அவரது கட்சி தொண்டர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் இம்ரான் கான் பேசிய போது, “காஷ்மீர் மக்களுக்காகத் துணை நிற்பது என்பது ஜிகாத் ( இஸ்லாமிய எதிரிகளுக்கு எதிரான போர்). அல்லா எங்களுடன் மகிழ்ச்சியுடன் இருப்பதற்காக நாம் இதனைச் செய்ய வேண்டும். இது ஒரு போராட்டம். எனவே நமக்கு நேரம் சரியாக இல்லாதபோது உங்களது இதயத்தை இழக்காதீர்கள். காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் துணையாக இருந்தால் அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, ஐ.நா. பொதுக்குழுக் கூட்டம் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பேச்சு பெரும்பாலும் காஷ்மீர் பற்றியே இருந்தது.

அதில் இம்ரான் கான் பேசிய போது, ''ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது பிரதமர் மோடி அரசு. இனிமேல் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்ற கேள்விக்கே இடமில்லை. அதுமட்டுமல்லாமல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் காஷ்மீர் விவகாரத்தால் போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. என்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து