முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்கிரவாண்டி- நாங்குநேரியில் அ.தி.மு.க வேட்பாளர்கள் மனு தாக்கல்

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.இந்த நிலையில்  அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வழங்கினர்.

நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் நெல்லை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலர் நாராயணன் போட்டியிடுகிறார். அவர் தமது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நடேசனிடன் வழங்கினார்.

இதேபோல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் காணை ஒன்றிய அதிமுக செயலாளர் முத்தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். அவர் தமது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் வழங்கினார். வேட்புமனு தாக்கலின்போது சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் கூட்டணி கட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று நடக்கிறது.3-ம் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும்.வேட்பு மனு தாக்கல் முடிந்து விட்டதால் அடுத்து தலைவர்களின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

கடம்பூர் ராஜூ  பேட்டி

கடைசி நாளான நேற்று  அ.தி.மு.க வேட்பாளர் நாராயணன், அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் நாங்குநேரி வானுமாமலை பெருமாள் கோவிலில்  சிறப்பு தரிசனம் செய்தார், அதனை தொடர்ந்து கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்த அதிமுக வேட்பாளர் நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில் நம்பியாறு - கருமேனியாறு நதி நீர் இணைப்பு திட்டம் 800 கோடியில் நடைபெற்று வருகிறது, குடிமராமத்து திட்டத்தின் கீழ் அனைத்து கன்மாய்களும் தூர்வாரப்பட்டு வருகிறது, இந்த திட்டங்களை வைத்து தேர்தலை சந்திப்போம், மக்கள் ஆதரவு நன்றாக இருக்கின்றது   அ.தி.மு.க வேட்பாளர் நாராயணன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து