முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் தொன்மை மொழி தமிழ்: பிரதமர் மோடி புகழாரம்

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, தமிழின் தொன்மை குறித்தும், ஐ.ஐ.டி. மாணவர்கள் குறித்தும் புகழ்ந்து பேசினார்.
சென்னை ஐ.ஐ.டி.யின் 56 - வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக கவர்னர் பன்வாரிலால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில் மாணவர்கள் வேட்டி -சட்டை அணிந்தும், மாணவிகள் புடவை மற்றும் சுடிதார் அணிந்தும் வந்து பட்டங்களை பெற்றனர்.

இந்த விழாவில் பேசிய மோடி கூறியதாவது:–

இளைஞர்களின் உத்வேகம் உற்சாகம் அளிக்கிறது. சாதித்த மாணவர்களின் பெற்றோர்களை பாராட்டுகிறேன். அவர்களின் தியாகம் உங்களை வளர்த்துள்ளது. இளைஞர்களின் கண்களில் ஒளியை காண்கிறேன். உங்களின் வெற்றியில் பெற்றோர்களின் உழைப்பு உள்ளது.

உங்கள் சாதனையில் ஆசிரியர்கள் உள்ளனர். உங்கள் வெற்றியில் அவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. அவர்களை நாம் உற்சாகப்படுத்துவோம். ஒருவரின் வெற்றியில் பலரின் பங்களிப்பு உள்ளது. எதிர்கால இந்தியாவின் கனவுகளை உங்களின் கண்களில் பார்க்கிறேன்.உலகின் பழமையான மொழி தமிழ். உலகின் பழமையான மொழியை கொண்ட மாநிலம் தமிழகம். இந்தியாவின் மூத்த மொழி தமிழ் மொழி. உலகின் மிக பழமையான மொழியான தமிழை போற்றுவோம். நீங்கள் ஒரு சிறந்த கல்வி சாலையில் வெளியேறி இருக்கிறீர்கள். உலகமே உற்றுநோக்கும் கல்விச்சாலை இது. இந்திய இளைஞர்கள், இளம் பெண்கள் மீது உலகமே எதிர்பார்ப்பில் உள்ளது. உங்களுடைய ஐ.ஐ.டி.யின் முன்னாள் மாணவர்கள் பல சாதனைகளை படைத்துள்ளனர்.

இந்தியர்களின் முயற்சி, உழைப்பு, தன்னம்பிக்கை கண்டு உலகமே வியக்கிறது. உலக அளவில் முன்னணியில் இருக்கும் இந்தியர்கள் ஐ.ஐ.டி.யில் படித்தவர்கள் தான். உலக முழுவதும் இந்திய சமுதாயம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுவரை 200 ஸ்டாட்அப் தொழில்கள் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. பசி, தூக்கம் பாராமல் அடுத்த கட்டத்தை நோக்கி நாம் நகர வேண்டும். ரோபோடிக் போன்ற நவீன தொழில்நுட்பத்தில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதில் சென்னை ஐ.ஐ.டி. முதன்மை இடம் பிடிக்கிறது. கடின உழைப்பால் முடியாததையும் முடித்துக் காட்டும் ஆற்றல் இந்திய மாணவர்களுக்கு உள்ளது.உலகின் டாப் 3 ஸ்டார்ட்அப் கண்டுபிடிப்புக்கள் இந்தியாவினுடையது. ஐஐடி மாணவர்கள் உலகில் எங்கு பணியாற்றினாலும் இந்தியாவின் வளர்ச்சியை கவனத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து