முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரமக்குடியில் பழங்கால சுடுமண் உறை கிணறு கண்டுபிடிப்பு

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

பரமக்குடி -இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகரத்திற்கு உட்பட்ட காட்டுப்பரமக்குடி எல்லைக்கு உட்பட்ட பாம்பு விழுந்தான் கிராமத்தில் ராக்கப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பகுதி திடலில் அக்கிராமத்தைச் சேர்ந்த
ஆசிரியர் சிவகுமார், ஊர்த்தலைவர் பூமிநாதன் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் துணையுடன் பரமக்குடியைச் சேர்ந்த ஆசிரியர் சரவணன் ஆய்வுப் பணியில் நேற்று ஈடுபட்டுள்ளார்.
 அதுசமயம் அங்கு குழி ஒன்று தோண்டுகையில் பழங்கால சுடுமண் உறைகிணறு இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.மேலும் இப்பகுதியில் வேலைப் பாடுகள் மிக்க மண் பாண்டங்கள், மண் ஓடுகள் பழங்கால மக்களின் எலும்புகள் ஆகியன கிடைத்துள்ளன.
 இங்கு கண்டு பிடிக்கப் பட்ட உறைகிணறு கீழடி அகழ்வாராய்ச்சியில் தோண்டி எடுக்கப்பட்டுள்ள சுடுமண் உறைகிணற்றின் வடிவத்தை ஒத்துள்ளது. அதாவது மூல வைகை வருசநாடு மலைத் தொடரில் இருந்து வைகை ஆறு கடலில் கலக்கும் ஆற்றங்கரை மற்றும் கச்சத்தீவு வரையில் வைகை நாகரிகம் பரவி உள்ளது. அதனடிப்படையில் வைகை ஆற்றங்கரையில் பரவியுள்ள வைகை நாகரிக தொல்லியல் மேடுகளில் பரமக்குடி பாம்பு விழுந்தான் என்ற இடமும் ஒன்றாகும்.   ஆகவே பாம்புவிழுந்தான் கிராமத்தில் தமிழ்நாடு அரசும், தொல்லியல் துறையும் முறையாக அகழாய்வு செய்து தமிழர்களின் வரலாறு பண்பாடு நாகரீகம் ஆகியவற்றை சான்றுகளுடன் வெளிப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆசிரியர் சரவணன் கடந்த மாதம் பரமக்குடி தாலுகா கலையூர் தொல்லியல் மேட்டில் இருந்து சமீபத்தில் முதுமக்கள் தாழி ஒன்றினை கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து