முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான வழக்கில் இன்று விசாரணை நடக்கிறது

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

கொழும்பு : குடியுரிமை பிரச்சினை தொடர்பான கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான வழக்கில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.

இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 16-ம் தேதி நடக்கிறது. அதில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பியும், முன்னாள் பாதுகாப்பு ஆலோசகருமான கோத்தபய ராஜபக்சே போட்டியிடுகிறார். ராஜபக்சே கட்சியின் வேட்பாளராக அவர் மனுதாக்கல் செய்துள்ளார். இதற்கிடையே, அவர் இலங்கை குடிமகன் அல்ல. அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்றும், அவரது இலங்கை குடியுரிமை சான்றிதழ் போலியாக உருவாக்கப்பட்டதாகவும் இலங்கை மேல்முறையீட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இலங்கை அரசியல் சட்டப்படி, அந்நாட்டு குடிமகன் மட்டுமே அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும். கோத்தபய, தேர்தலில் போட்டியிட தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) விசாரிப்பதாக மேல்முறையீட்டு கோர்ட்டு நேற்று முன்தினம் அறிவித்தது. தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் கோரிக்கை பற்றியும் கோர்ட்டு விசாரிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து