முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 11-ல் பிரதமர் -சீன அதிபர் வருகை உச்சகட்ட பாதுகாப்பில் மாமல்லபுரம்

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங், சந்திப்பு தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. நட்சத்திர ஓட்டல் ஒன்றில், இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. இதையொட்டி மாமல்லபுரம் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வரும் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை மாமல்லபுரத்தில் முகாமிடும் இரு தலைவர்களும் மகாபலிபுரத்தின் புராதன சின்னங்களையும் கண்டுகளிக்கவுள்ளனர். இரு நாட்டு தலைவர்களின் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள புராதன மையங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தார் சாலைகள் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்பட்டு வருகின்றன. சுகாதாரம், குடிநீர், மின்விளக்கு வசதிகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். மத்திய தொல்லியல் துறையும் பாரம்பரிய சின்ன மையங்களில் அழகிய புல்வெளிகளை அமைத்துள்ளன.

பாதுகாப்பு முன்னேற்பாடு, ஆயத்த பணிகள் குறித்தும் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் 2-ம் கட்டமாக பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் தமிழக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் சுற்றி பார்த்து ஆய்வு செய்தனர். மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய்கோகலே மற்றும் பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகள், உள்ளிட்ட10 பேர் கொண்ட குழுவினரும் மாமல்லபுரம் சென்று ஆய்வு மேற்கொண்டனர். கடற்கரை கோவில் முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளதை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோர் உத்தரவிட்டனர். இதனால், காவல்துறையின் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் மாமல்லபுரம் வந்துள்ளது.

முன்னதாக, சர்வதேச உளவு அமைப்பு பயங்கரவாதிகளால் பிரதமர் மோடிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரித்துள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஜி.பி. திரிபாதி, கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த்முரளி, டி.ஐ.ஜி. தேன்மொழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மாமல்லபுரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து, போலீசார் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் நடந்தது. அப்போது மாமல்லபுரம் முழுவதும் பன்மடங்கு பாதுகாப்பு பலப்படுத்துமாறு டி.ஜி.பி. உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து