முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்கள் அரசியலை பார்த்து ஒதுங்கக் கூடாது: கமல்ஹாசன்

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : மாணவர்கள் அரசியலை பார்த்து ஒதுங்கக் கூடாது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.  

சென்னை, லயோலா கல்லூரியில் இளைஞர்கள் அதிக அளவில் சமூக வலை தளங்களை பயன்படுத்துவது குறித்த கலந்துரையாடல் நேற்று காலை நடைபெற்றது. நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இதில் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலைந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

 மாணவர்கள் அரசியல் பேசுவதில் இருந்து ஒதுங்கி நிற்க கூடாது. அரசியல் பேசாமல் கல்வி, விவசாயம் முன்னேறாது. நான் பேசுவது அரசியல் தான். சந்தேகம் வேண்டாம். மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆண்டுக்கு ஒரு புதிய திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். வாரிசு அரசியல் என்பது சரியானது அல்ல. தமிழக அரசியலில் இருந்து வாரிசு அரசியலை பிரிக்க முடியாது. அதனால் தான் உங்களையும் சேர்த்து என் குடும்பத்தை பெரிதாக்கினேன். இவ்வாறு அவர் பேசினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து