முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கம்பி மீது நடப்பதற்கு பதிலாக ராஜினாமா செய்து விடுங்கள் - எடியூரப்பாவுக்கு சித்தராமையா வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

 பெங்களூரு : கம்பி மீது நடப்பதற்கு பதிலாக ராஜினாமா செய்து விடுங்கள் என்று முதல்வர்  எடியூரப்பாவை சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.  

முன்னாள் முதல்வர் சித்தராமையா ராய்ச்சூரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஆட்சி நிர்வாகத்தை நடத்தும் விஷயத்தில் தான் கம்பி மீது நடப்பதாக முதல்வர் எடியூரப்பா சொல்கிறார். கம்பி மீது நடக்கும் நிலை ஏன் வந்தது?. கம்பி மீது நடப்பதற்கு பதிலாக ராஜினாமா செய்து விட்டு வீட்டுக்கு சென்று விடுங்கள். எடியூரப்பாவை கண்டால், எனக்கு அய்யோ பாவம் என்று நினைக்க தோன்றுகிறது. கர்நாடக பா.ஜ.க.வில் எடியூரப்பாவின் இறக்கைகள் நறுக்கப்பட்டு விட்டன. மத்திய அரசிடம் வெள்ள நிவாரண பணிகளுக்கு நிதியை கேட்டு பெறும் தைரியம் அவருக்கு இல்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யாமல் மத்திய, மாநில அரசுக்கு கண், காது, மூக்கு இவை யாவும் இல்லை. கர்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை, இயற்கை பேரிடர் என்று மத்திய அரசு அறிவித்திருக்க வேண்டும். முன்பு மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, கர்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு உடனே நிதியை அறிவித்தார்.

மத்தியில் பா.ஜ.க. அரசு உள்ளது. மாநிலத்திலும் பா.ஜ.க. அரசு அமைந்தால், அதிக நிதியை கேட்டு பெற முடியும் என்று எடியூரப்பா தேர்தலின் போது கூறினார். இப்போது மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜ.க. அரசு தான் உள்ளது. ஏன் நிதியை பெற முடியவில்லை?. வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் யாரும் சுற்றுப்பயணம் செய்யவில்லை. பாதிக்கப்பட்டு உள்ள மக்கள் தெருவுக்கு வந்து விட்டனர். அவர்களின் கஷ்டத்தை கேட்க யாரும் இல்லை.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து