முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

115-வது பிறந்தநாள் ; லால்பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

புதன்கிழமை, 2 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 115-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 115-வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.  இதுகுறித்து பிரதமர் நரேந்திரமோடி தனது டுவிட்டர் பக்கத்தில் லால் பகதூர் சாஸ்திரியை நினைவுக்கூர்ந்து டுவிட் செய்துள்ளார். அதில் லால் பகதூர் சாஸ்திரியின் புகைப்படங்கள் கொண்ட வீடியோ பதிவுடன் அவரின் மன உறுதியையும் கதர் உடை மீதான அவரது பிடிப்பையும் பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 115-வது பிறந்தநாளையொட்டி டெல்லி விஜய்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

உத்தரபிரதேச மாநிலம் முகல்சராயில் 1904-ம் ஆண்டு பிறந்த லால் பகதூர் சாஸ்திரி, சுதந்திரப் போராட்ட வீரர்களில் முக்கியமானவர் ஆவார். ஜவஹர்லால் நேருவை தொடர்ந்து இந்தியாவின் 2-வது பிரதமராக லால்பகதூர் சாஸ்திரி பதவி ஏற்றார். அப்போது கட்ச் தீபகற்பத்தின் ஒரு பாதியை உரிமை கோரிய பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே 1965-ம் ஆண்டு போர் மூண்டது.

போர்க்களத்தில் நின்று லால் பகதூர் சாஸ்திரி அளித்த உத்வேகத்தால் இந்திய எல்லைகளுக்கு ஆயுதங்களுடன் நுழைந்த பாகிஸ்தான் வீரர்களை இந்திய வீரர்கள் துணிச்சலுடன் எதிர்கொண்டு அவர்களது முயற்சியை முறியடித்தனர். லால் பகதூர் சாஸ்திரியின் துணிச்சலை நாடு முழுவதும் பாராட்டி வந்த நிலையில் 1966-ம் ஆண்டு அப்போதைய சோவியத் ஒன்றியத்தில் இருந்த தாஷ்கண்ட் உச்சி மாநாட்டில் பங்கேற்றபோது லால் பகதூர் சாஸ்திரி மரணம் அடைந்தார். அவர் மரணத்திற்கான காரணம் தற்போது வரை சர்ச்சையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து