முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு

புதன்கிழமை, 2 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு தொடர்பான முன்னேற்பாடுகளை பார்வையிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாமல்லபுரம் வந்தார். மோடியும், சீன பிரதமரும் பங்கேற்கும் இடம், அவர்கள் பார்வையிட உள்ள பகுதிகள் அனைத்திற்கும் சென்று முதல்வர் நேரில் ஆய்வு செய்தார்.

மாமல்லபுரம் நகரில், சீன அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி பேச்சு நடத்த உள்ளார். வரும் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை இருவரும் மகாபலிபுரத்தில் தங்குகிறார்கள். இந்த இருதரப்பு உச்சி மாநாட்டின்போது இரு தலைவர்களும் பேச்சு நடத்துவதோடு, கிழக்கு கடற்கரையோர எழில் நகரான மாமல்லபுரத்தின் புராதன சிற்பங்களையும் சின்னங்களையும் பார்வையிடுகின்றனர்.

இந்த பேச்சுவார்த்தையில் இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக   அறிவிக்கப்பட்டுள்ள மாமல்லபுரத்தின் சிற்பங்கள் குறித்தும் சிறப்புகள் குறித்தும் சீன அதிபருக்கு விளக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள், மத்திய - மாநில அரசுகளின் உயரதிகாரிகள் கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது. இரு தலைவர்களும் தங்கவுள்ள கோவளம் தாஜ் நட்சத்திர விடுதி, சுற்றிப் பார்க்க இருக்கும் மாமல்லபுரம் அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம், கலங்கரை விளக்கம், கடற்கரைக் கோயில் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாமல்லபுரம் வந்தார். அங்கு மாவட்ட கலெக்டர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர், பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார். அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். ஏற்கெனவே, சீன அதிகாரிகள் குழு, மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர் மாமல்லபுரத்தில் பலமுறை ஆய்வு நடத்தியுள்ளார்கள்.

இரு நாட்டு தலைவர்களின் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள புராதன மையங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தார் சாலைகள் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள பகுதிகள், பூங்காக்கள் அழகு படுத்தப்படுகின்றன. மகாபலிபுரம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்க துவங்கிவிட்டது. சுகாதாரம், குடிநீர், மின்விளக்கு வசதிகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் விரைந்து செய்து வருகின்றனர்.

மத்திய தொல்லியல் துறையும் பாரம்பரிய சின்ன மையங்களில் அழகிய புல்வெளிகளை அமைத்துள்ளன. பாதுகாப்பு முன்னேற்பாடு, ஆயத்த பணிகள் குறித்தும் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் 2-ம் கட்டமாக பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் தமிழக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் சுற்றி பார்த்து ஆய்வு செய்தனர்.

மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய்கோகலே மற்றும் பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகள், உள்ளிட்ட10 பேர் கொண்ட குழுவினரும் மாமல்லபுரம் வந்துள்ளனர். கடற்கரை கோவில் முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளதை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோர் உத்தரவிட்டனர். இதனால், உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் மாமல்லபுரம் வந்துள்ளது. சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு உள்ளது. மேலும் மாமல்லபுரம் பகுதியில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட தள்ளுவண்டி, மற்றும் பெட்டிக்கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு நகருக்கு வெளியே அப்புறப்படுத்தபட்டது.

கடைகளை அகற்றிய பகுதிகளில் பூஞ்செடிகள் வைக்கப்பட்டு வருவதால் மாமல்லபுரம் நகரமே பளிச்சென காட்சி அளிக்கிறது. அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாமல்லபுரம் கடற்கரை கோயில் எதிரே புதிதாக கட்டப்பட்டுள்ள வரலாற்று காட்சிக் கூடத்துடன் கூடிய நுழைவு சீட்டு கட்டிடத்தை தலைவர்கள் இருவரும் சேர்ந்து திறந்து வைக்க உள்ளனர்.

இதையடுத்து அதன் அருகே இருநாட்டு நட்புறவையும் உணர்த்தும் வகையில் இரண்டு யானைகளுடன் கூடிய புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து இருக்கிறது. பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின் பிங்கும் அதிக நேரம் சந்தித்து பேசும் இடமாகவும் கலை நிகழ்ச்சியை பார்த்து ரசிக்கும் இடமாகவும் கடற்கரை கோவில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து