முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலத்தில் காந்தி ஜெயந்தி தினத்தன்று அரசு உத்தரவினை மீறி திறந்திருந்த இறைச்சிக் கடைகளிலிருந்து 200கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல்:

புதன்கிழமை, 2 அக்டோபர் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் காந்தி ஜெயந்தி நாளன்று அரசு உத்தரவினை மீறி திறந்திருந்த இறைச்சிக்கடைகளில் விற்பனைக்கென  வைக்கப்பட்டிருந்த தரம் குறைந்த 200 கிலோ ஆட்டிறைச்சியை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
காந்தி ஜெயந்தி தினத்தன்று திருமங்கலம் நகரின் சில பகுதிகளில் அரசு உத்தரவினை மீறி திறந்து வைக்கப்பட்டிருந்த ஆட்டிறைச்சிக் கடைகளில் தரம்குறைந்த ஆட்டிறைச்சி விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜாவுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து உத்தரவை மீறி திறந்திருந்த சில இறைச்சிக்கடைகளில் ஆணையாளரின் உத்தரவின் பேரில் நகராட்சி சுகாதார அதிகாரி சீனிவாசன்,ஆய்வாளர் சிக்கந்தர் மற்றும் பணியாளர்கள் நேற்று  அதிரடி சோதனை நடத்தினார்கள்.அப்போது உறைநிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தரம் குறைந்த 200 கிலோ ஆட்டிறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.பின்னர் அவற்றை திருமங்கலம் நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்து நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா முன்னிலையில் பினாயில் ஊற்றியும்  பின்னர் மண்ணில் புதைத்தும் அழித்தனர்.திருமங்கலம் நகராட்சி பகுதியில் காந்தி ஜெயந்தி நாளன்று திறந்திருந்த இறைச்சிக் கடைகளில் விற்பனைக்கென வைக்கப்பட்டிருந்த தரம் குறைந்த 200கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் திருமங்கலம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முன்னதாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா தலைமையில் நடைபெற்ற நெகிழி ஒழுpப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழியேற்றுக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து