முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட விமானம் விபத்தில் சிக்கி 7 பேர் பலி

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

விண்ட்சார் லாக்ஸ் : அமெரிக்காவில் 2ம் உலக போரில் ஈடுபட்ட விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகி உள்ளனர். 

அமெரிக்காவின் ஹார்ட்போர்டு கவுண்டி, விண்ட்சார் லாக்சில் உள்ள பிராட்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இரண்டாம் உலகப் போர் காலத்து விமானமான, போயிங் பி-17 ரக விமானம் நேற்று முன்தினம் 13 பேருடன் புறப்பட்டு சென்றது. 

இந்த நிலையில், விமானம் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த விமான நிலையத்தில் உடனடியாக விமானத்தை தரையிறக்க விமானி முயற்சித்துள்ளார். ஆனால், கட்டுப்பாட்டை இழந்து திசைமாறிய விமானம், விமான நிலைய பராமரிப்பு மையம் மீது மோதியது. மோதிய வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர். சிலர் பலத்த காயமடைந்தனர். நிலப்பகுதியில் இருந்த ஒருவர் காயமடைந்துள்ளார். விமானத்தில் 3 விமானிகள் மற்றும் 10 பயணிகள் இருந்தனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கவர்னர் லேமண்ட் இரங்கல் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து