முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் அதிகாரி வீட்டில் டன் கணக்கில் தங்கம் பறிமுதல்

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

பீஜிங் : ஊழலில் ஈடுபட்ட அதிகாரி வீட்டில் பதிமூன்றரை டன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.  

சீனாவில் ஊழலில் ஈடுபட்ட அதிகாரி ஒருவரின் வீட்டிலிருந்து பதிமூன்றரை டன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஹைக்கு என்ற இடத்தில் அரசு அதிகாரி ஒருவர், தனது வீட்டில் ஏராளமான தங்கத்தை பதுக்கி வைத்திருப்பதாக ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து குறிப்பிட்ட அதிகாரியின் வீட்டை ஊழல் தடுப்புத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, குவியல் குவியலாக தங்க பிஸ்கட்டுகள், நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட பதிமூன்றரை டன் தங்க நகைகளின் மதிப்பு 530 மில்லியன் பவுண்ட் ஆகும். மேலும் அவரது வங்கிக் கணக்கில் இருந்து 30 பில்லியன் பவுண்டு பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சீனாவில் அதிகபட்ச ஊழலில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படுவது வழக்கம் என்ற போதிலும் சமீபத்தில் இதுபோன்ற மிகப்பெரிய தொகை கைப்பற்றப்பட்டிருப்பது முதன்முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து