முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாங்குநேரி - விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வரும் 12-ம் தேதி முதல், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் - ஆறு நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார்

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை - வரும் 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நாங்குநேரி - விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. 30-ம் தேதியோடு மனுதாக்கல் முடிவடைந்தது. பிறகு 1-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலை செய்யப்பட்டன. வேட்புமனுக்களை வாபஸ் பெற நேற்று கடைசி நாளாகும். இதையடுத்து இந்த தொகுதிகளில் விரைவில் பிரச்சாரம் சூடு பிடிக்க உள்ளது.

நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் ரெட்டியார்ப்பட்டி நாராயணனும், விக்கிர வாண்டியில் அ.தி.மு.க வேட்பாளராக முத்தமிழ்ச்செல்வனும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் இரு தொகுதிகளிலும் முதல்வரும் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஆறுநாட்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார்.
இது குறித்து அ.தி.மு.க தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

விக்கிரவாண்டி நாங்குநேரி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வரும் 12-ம் தேதி முதல் 18-ம் தேதி அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
அதன் விபரம் வருமாறு:-

12 , 13, ஆகிய நாட்களில் நாங்குநேரியிலும் 14, 15 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டியிலும் பிரசாரம் மேற்கொள்கிறார். அதை தொடர்ந்து 16-ம் தேதி நாங்குநேரியிலும் 18-ம் தேதி விக்கிரவாண்டியிலும் பிரசாரம் மேற்கொள்வார் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வன் நேற்று தொகுதியில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்தார். அவரை பொதுமக்கள் உற்சாகத்தோடு வரவேற்றனர். இதேபோல், நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் நாராயணனும் தனது பிரச்சாரத்தை துவக்கிவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து