முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்தது பள்ளிகள் திறந்த முதல் நாளே புத்தகங்கள் வழங்கப்பட்டன: மாணவர்கள் மகிழ்ச்சி

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி திறப்பு நாளிலேயே விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டதால் மாணவ  மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிப்போருக்கு பருவத்தேர்வுகளும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டுத்  தேர்வுகளும் செப்டம்பர் 12-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெற்றது. 9  நாட்கள் காலாண்டு விடுமுறைக்குப் பின் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கும் நாளிலேயே 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும்  மாணவ, மாணவிகளுக்கு, 2-ம் பருவத்திற்கான விலையில்லா பாடப்புத்தகங்களை  வழங்க அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாகம் மூலம் சுமார் 2 கோடி  பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டன. அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்  தங்கள் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு தேவையான 2-ம் பருவ பாடப்புத்தகங்களை பிரித்து அனுப்பி வைத்தனர். பள்ளி திறக்கும்போது மாணவர்களுக்கு  பாடப்புத்தகங்களை வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 9  நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்றே 2-ம் பருவத்திற்கான  விலையில்லா பாடப்புத்தகங்கள் பள்ளிகளில் வழங்கப்பட்டன. இதனால் மாணவ மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல, சீருடைகள் நோட்டுபுத்தகங்கள் உள்ளிட்ட இலவச பொருட்களும் வழங்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து