முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டாசுகளை வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்படும்: அமைச்சர் கருப்பணன் தகவல்

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தீபாவளிக்குப் பட்டாசுகளை வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று   அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காற்று மாசுபாடு குறித்த ஒரு நாள் கருத்தரங்கு  நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சுற்றுச்சூழல்துறை  அமைச்சர்கே.சி.கருப்பணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.,

உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் அஜினோமோட்டோவுக்குத் தடை விதிப்பது குறித்து  பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.  முதல்வரிடம் கலந்து ஆலோசித்த பிறகு இதுகுறித்து முடிவு எடுக்கப்படும்.பிளாஸ்டிக்   கப்புகளில் டீ, காபி சாப்பிடுவது குறித்து நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  அதைத் தொடர்ந்து செய்யும்போது கேன்சர் ஏற்படும் என்று மருத்துவர்கள்  எச்சரித்துள்ளனர். பிளாஸ்டிக் தடை இன்னும் கடுமையாக்கப்படும். கடந்த ஆண்டைப்  போலவே இந்த முறையும் தீபாவளிக்குப் பட்டாசுகளை வெடிக்க நேரக் கட்டுப்பாடு  விதிக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு அதிக மாசை ஏற்படுத்தாத பட்டாசுகளை மட்டுமே  வெடிக்க முடியும். தரம் பிரிக்கப்பட்ட பட்டாசுகளுக்கு மட்டுமே அனுமதி  அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து