முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 19 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 19 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

சென்னை மாவட்டம், அம்பத்தூர் வட்டம், கொரட்டூர் கிராமத்தில் மின்பாதை ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த துளசி என்பவரின் மகன் மூர்த்தி என்பவர் மின்சார கோபுரத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க முற்பட்ட போது, தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், கருங்கானூர், எலவம்பட்டி       கிராமத்தைச் சேர்ந்த  ராஜா என்பவரின் மகன் கவியரசு என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

வேலூர் மாவட்டம், நெமிலி வட்டம், கீழாந்துரை கிராமத்தைச் சேர்ந்த முனிசாமி என்பவரின் மகன் செல்வன் ராஜ்குமார் என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், வெள்ளிச்சந்தை கிராமத்தைச் சேர்ந்த ராமசுவாமி என்பவரின் மகள் பானுமதி என்பவர் சாலையில் பாலம் அமைக்கும் பணியின் போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், வெங்காரம்பேரையூர் கிராமத்தைச் சேர்ந்த சிங்காரு என்பவரின் மகன் அன்பரசன் என்பவர்  எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

சிவகங்கை மாவட்டம் மற்றும் வட்டம், முத்துபட்டிணம்  கிராமத்தைச் சேர்ந்த  சின்னையா என்பவரின் மனைவி தெய்வானை மற்றும் லெட்சுமணன் மனைவி சரண்யா ஆகிய இருவரும் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்; கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், நட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த தாமஸ் என்பவரின் மகன் ராபர்ட் என்பவர் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மஜரா குச்சிப்பட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரின் மகன் பழனிசாமி என்பவர் எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின் கம்பியை தொட்டதில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், கோயம்புத்தூர் பைபாஸ் சாலை விரிவாக்கப்பணியில் மின் கம்பம் மாற்றியமைக்கும் பணியின் போது, மின் கம்பம் சாய்ந்து விழுந்ததில், ஜெயபாண்டி என்பவரின் மகன் கோபாலகிருஷ்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், அ.கலையம்புத்தூர் கிராமத்தில், பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஜெயந்தி என்பவரின் கணவர் ஜெகதீசன் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், பாச்சல் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி என்பரின் மகன் அனுமன் என்பவர் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; வேலூர் மாவட்டம், நெமிலி வட்டம், கீழ்வீராணம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் ஆறுமுகம் என்பவர் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், பெருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வாஞ்சிநாதன் என்பவரின் மனைவி சவுந்தரவள்ளி என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற  செய்தியையும்; விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், நாராணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரத்தினசாமி என்பவரின் மகன் அருண்குமார் என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், சாத்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரின் மகன் சௌந்தர் என்பவர் எதிர்பாராத விதமாக, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், ஓடாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சை என்பவரின் மகள் செல்வி தேவி என்பவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, பாம்பு கடித்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்; விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், அச்சம்தவிழ்த்தான் கிராமத்தைச் சேர்ந்த தென்திருப்பதி என்பவரின் மகள் சிறுமி ரக்ஷனா என்பவர் தோட்டத்திற்கு சென்ற போது, பாம்பு கடித்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்; கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், செடுத்தான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த இளஞ்சியம் என்பவரது மகன் தமிழரசன் என்பவர் பாம்பு கடித்து  உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 19 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, மேற்கண்ட 19  நபர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து