முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு - நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி இடைத்தேர்தலில் 44 பேர் போட்டி

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

 சென்னை : நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் மொத்தம் 44 பேர் போட்டியிடுகின்றனர்.  

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க., காங்கிரஸ், நாம் தமிழர் உள்பட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

இதேபோல், விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க. உள்பட 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மேலும், புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் மொத்தம் 44 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.வேட்பு மனுக்களை வாபஸ் பெற நேற்று தான் கடைசி நாளாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து