முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதே விண்வெளி மையத்துக்கு சென்ற அரேபியர் பூமி திரும்பினார்

வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற முதல் அரேபியர் பூமி திரும்பினார்.

 
சர்வதேச விண்வெளி மையத்துக்கு ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் கடந்த மாதம் 25-ம் தேதி புறப்பட்டது. இதில் ரஷ்ய விண்வெளி வீரர் ஓலக், நாசா வீராங்கனை ஜெசிகா மேயர் ஆகியோருடன் ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த ஹசா அல்-மன்சூரி என்ற வீரரும் சென்றார். இந்த மையத்துக்கு சென்ற முதல் அரபு வீரர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது.

இந்நிலையில் சோயூஸ் விண்கலம், சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து நேற்று முன்தினம் பூமிக்கு திரும்பியது. அதல் அல் மன்சூரியுடன், சர்வதேச விண்வெளி மையத்தில் 203 நாட்கள் தங்கி பணியாற்றிய நாசா வீரர் நிக் ஹாக், ரஷ்ய வீரர் அலெக்சே ஓவ்சின் ஆகியோர் பூமி திரும்பினர். அல் மன்சூரியுடன் விண்ணுக்கு சென்ற ரஷ்ய வீரர் ஓலக், நாசா வீராங்கனை ஜெசிகா ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்தின் 6 பேர் குழுவில் இணைந்து பணியாற்றினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து