முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்களது பிள்ளைகள் அரசு பள்ளியில் படிக்கிறார்களா? அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பதிலளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளியில் பயில்கிறார்களா? என்பதை அறியும் நோக்கில், அதுகுறித்து அனைத்து ஆசிரியர்களும் பதிலளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகள் பற்றிய விவரங்களை பள்ளிக் கல்வித்துறை கேட்டுள்ளது. கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தில் (எமிஸ்), அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளின் விவரங்களை உள்ளீடு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக எமிஸ் இணையதளத்தில் டீச்சர்ஸ் சில்ரன் டீடெய்ல்ஸ் என்ற புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய பக்கத்தில், உங்கள் பிள்ளைகள் யாராவது அரசுப்பள்ளியில் பயில்கிறார்களா என்று கேட்கப்பட்டிருக்கும். அதை தேர்வு செய்தால் ஆமாம், இல்லை, பொருந்தாது என்று 3 வகை தேர்வு வாய்ப்புகள் இருக்கும் வகையில் பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளியில் பயில்கிறார்களா என்ற கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என ஆசிரியர்கள் பதிலளிக்க வேண்டும். திருமணம் ஆகாதவர் அல்லது பிள்ளைகளை கல்லூரியில் சேர்த்துள்ளவர்கள் எனில் பொருந்தாது என்ற பதிலை தேர்வு செய்ய வேண்டும். அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் உடனடியாக கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தில் தங்கள் பிள்ளைகள் பற்றிய விவரங்களை பதிவு செய்து அதை பள்ளிக்கல்வித்துறைக்கு தெரியப்படுத்த பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து