முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாங்குநேரி - விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க முழு ஆதரவளிக்கும்: பொன்,.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

இடைத்தேர்தல் நடைபெற உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு பா.ஜ.க. முழுஆதரவு அளிக்கும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், மீன்வளம் மற்றும் பணியாளர் சீர்திருத்தத்துறை அமைச்சருமான ஜெயகுமார், நேற்று காலை சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்திற்கு வந்தார். அங்கு பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதா கிருஷ்ணனை சந்தித்து பேசினார். இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்குமாறு பொன்.ராதாகிருஷ்ணனிடம் ஆதரவு கேட்டார். இந்த சந்திப்பிற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த பொன். ராதாகிருஷ்ணன்,

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியாக தேர்தலை சந்தித்தது. அதன் பின்பாக கூட்டணி தொடர்ந்து வருகிறது. தற்போது நடைபெற உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியிலும், அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயகுமார் கேட்டுக் கொண்டார். அகில இந்திய தலைமைக்கும், அ.தி.மு.க. தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு பா.ஜ.க. முழு ஆதரவு அளிக்கும். அதன்படி அ.தி.மு.க.வை ஆதரித்து தமிழக பா.ஜ.க. தேர்தல் பணியில் ஈடுபடுவது குறித்தும் எந்த எந்த தலைவர்கள் பிரசாரத்திற்கு வர இருக்கின்றார்கள் போன்ற விவரங்களை கேட்பதற்காக அமைச்சர் ஜெயகுமார் வந்தார். எங்கள் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. இது புதிய பேச்சுவார்த்தை அல்ல. ஏற்கனவே கூட்டணி என்ற காரணத்தால் எந்த வித பிரச்னையும் இல்லாமல் அமைந்தது. பா.ஜ.க. தலைவர்கள் பிரசாரம் பற்றி கட்சி தலைமை அறிவிக்கும். நாங்குநேரில் காங்கிரஸ் துடைத்தெறியப்பட வேண்டும். விக்கிரவாண்டியில் தி.மு.க. தோற்கடிக்கப்பட வேண்டும். அ.தி.மு.க.வுடனான கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு எந்த விதமான கருத்துவேறுபாடு இல்லை என்று அவர் தெரிவித்தார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் எப்போது அறிவிக்கப்படுவார் என்று நிருபர்கள் பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, தமிழக பா.ஜ.க. தலைவர் முறையாக அறிவிக்கப்படுவார் என்று அவர் பதிலளித்தார். மணிரத்னம் மீது தேச துரோக வழக்கு பற்றிய கேள்விக்கு அவர் என்ன கடிதம் எழுதினார் என்று தெரியவில்லை. அதை படித்த பின்பு தான் கருத்து கூற முடியும் என பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். இந்த சந்திப்பின் போது பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில அமைப்பு செயலாளர்கள் கேசவ விநாயகன், மாநில பொதுசெயலாளர்கள் கருப்பு முருகானந்தம், வானதி சீனிவாசன், சுப.நாகராஜன், பொருளாளர் எஸ்.ஆர் சேகர், வணிகர் பிரிவு தலைவர் ராஜாக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து