முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. இருப்பினும் நேற்று வாக்குகள் திட்டமிட்டபடி எண்ணப்பட்டன.   

தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் அப்பாவு, அ.தி.மு.க வேட்பாளர் இன்பதுரையிடம் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இன்பதுரை 69,590 வாக்குகளும், அப்பாவு 69,541 வாக்குகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்பதுரையின் வெற்றிக்கு எதிராக தி.மு.க. வேட்பாளர் அப்பாவு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், வாக்கு எண்ணிக்கையின் போது 203 தபால் வாக்குகளை எண்ணாமல் அதிகாரிகள் நிராகரித்ததாகவும், அந்த வாக்குகளை எண்ணும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், தபால் வாக்குகளை மீண்டும் எண்ணும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. மேலும், 19, 20 மற்றும் 21-வது சுற்றில் எண்ணப்பட்ட வாக்குகளை மீண்டும் எண்ணவும் ஐகோர்ட் உத்தரவிட்டது.

அதன்படி நேற்று  காலை 11.30 மணிக்கு ஐகோர்ட்டில் மறுவாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன. 


இந்த நிலையில் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ. இன்பதுரை தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

இருப்பினும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட் முடிவை வெளியிட மட்டும் தடை விதித்துள்ளது. இன்பதுரையின் மனு மீதான விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து