ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம்

வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2019      விளையாட்டு
SPORTS-3-2019 10 04

Source: provided

மும்பை : ஐ.சி.சி. வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி, பும்ரா ஆகியோர் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளனர்.

இந்திய அணி கேப்டன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி சூப்பர் ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். பும்ரா பந்து வீச்சில் அசத்தி வருகிறார்.

ஐ.சி.சி. வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தரவரிசையில் இருவரும் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்துள்ளனர். பேட்டிங்கில் இந்திய துணைக்கேப்டன் ரோகித் சர்மா 2-வது இடத்தை பிடித்துள்ளார். இலங்கைக்கு எதிரான தொடரில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய முகமது அமிர் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து