முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்னாப்பிரிக்காவில் விமானத்தில் கடத்த முயன்ற சிங்க எலும்புகள்

சனிக்கிழமை, 5 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

கேப்டவுன் : தென் ஆப்பிரிக்காவில் விமானத்தில் கடத்த முயன்ற சிங்க எலும்புகள் பெட்டி, பெட்டியாக சிக்கி உள்ளன.

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகர சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தின் சரக்கு பிரிவில் கடத்தல் பொருட்கள் இருப்பதாக வந்த தகவலின் பேரில் சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் உடனடியாக சோதனை நடத்தினர்.

அப்போது அலுமினிய தாளில் மூடப்பட்டிருந்த 34 பெட்டிகளில் 342 கிலோ எடை கொண்ட சிங்க எலும்புகள் இருப்பதை கண்டுபிடித்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த இருவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து தென் ஆப்பிரிக்கா அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெரும்பாலும் ஆசியாவில் மருத்துவ உபயோகத்திற்கும், ஆபரண தயாரிப்புகளுக்கும் இந்த சிங்க எலும்புகள் பயன்படுத்தப்படுகின்றன. சிங்கங்களின் எலும்புகளை ஏற்றுமதி செய்வது சட்டபூர்வமானது என்றாலும், அவற்றை வெளியே அனுப்ப சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சிறப்பு அனுமதி பெறப்பட வேண்டும். இதில் அதற்கான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து